நிறைவடைந்த உலகக் கிண்ணப் போட்டிகளும் நிகழ்ந்த மாற்றங்களும், முறியடிக்கப்பட்ட சாதனைகளும்…

sanga-YKKமெல்போன்: அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்தில் நடந்து முடிந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி துடுப்பாட்டத்தில் முன்னர் இல்லாத மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் ஒருசில உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டதாகவும் அமைந்தது. உலக கிண்ணத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

* உலகக் கிண்ணத்தில் 3 தடவைகள் அணியொன்று 400 ஓட்டங் களுக்கு மேல் பெற்றது. இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு பெர்முடா வுக்கு எதிராக இந்திய அணி மாத்திரமே 5 விக்கெட்டுகளை இழந்து 413 ஓட்டங்களை பெற்றிருந்தது. தவிர இந்த தொடரில் 30 தடவைகள் 300 ஓட்டங்களுக்கு மேல் பெறப்பட்டது. இது முந்தைய உலகக் கிண்ணத்துடன் ஒப்பிடுகையில் 65 வீத அதிகரிப்பாகும். 2011 உலகக் கிண்ணத்தில் 17 தடவைகள் மாத்திரமே 300 ஓட்டங்களுக்கு மேல் பெறப்பட்டுள்ளது.

australia world cup 2015

* இம்முறை உலகக் கிண்ணத்தில் மொத்தம் 38 சதங்கள் பெறப்பட்டன. இது முந்தைய உலகக் கிண்ணத்துடன் ஒப்பிடுகையில் 50 வீத அதிகரிப் பாகும். 2011 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 24 சதங்கள் பெறப்பட்டன. இது அதற்கு முந்தைய உலகக் கிண்ணத்தை விடவும் மூன்று சதங்களே அதிகமாக இருந்தது.

* துடுப்பாட்ட வரிசையில் 5 அல்லது 6 ஆவது இடத்தில் வந்த 9 வீரர் கள் இம்முறை உலகக் கிண்ணத்தில் சதம் பெற்றுள்ளனர். இதற்கு முன்னர் 1996 மற்றும் 1983 தொடர்களில் இந்த வரிசையில் வந்த வீரர்களால் தலா இரண்டு சதங்கள் பெறப்பட்டதே முன்னர் அதிகமாக இருந்தது. இந்த 9 சதங்களில் மூன்று சதங் கள் தென்னாபிரிக்க வீரர் களான ஏ.பி. டிவிலியர்ஸ், டேவிட் மில்லர் மற்றும் Nஜ.பி. டுமினி ஆகியோ ரால் பெறப்பட்டது.

* 7 வீரர்கள் இம் முறை தொடரில் 150 அல் லது அதற்கு மேல் ஓட் டங்களை பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய தொடர் களில் இவ்வாறான இர ண்டு இன்னிங்ஸ்களுக்கு மேல் பதிவாகவில்லை. இதில் இரண்டு இரட்டைச் சதங்களும் பெறப்பட்டன. முந்தைய தொடர்களில் எவரும் இந்த இலக்கை எட்டவில்லை. ஆனால் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்களை பெற்றிருந்த கரிகேர்ஸ் டனின் (188) சாத னையை முறியடிக் கப்பட்டது 19 ஆண் டுகளுக்குப் பின்னராகும். ஆனால் இரட் டைச் சதம் பெற்று இந்த சாதனையை கிறிஸ் கெயில் முறியடிக்க ஒரு மாதத்திற்குள் மார்டின் கப் டில் அந்த சாதனை முறியடித்தார்.

gayle

* இம்முறை உலகக் கிண்ணத்தில் சராசரியாக 54 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் விளாசப்பட்டுள்ளது. இதுவே 2011 உலகக் கிண்ணத்தில் 99 பந்துகளுக்கே ஒரு சிக்ஸர் விளாசப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சராசரியாக மிகக் குறைந்த பந்துகளில் ஒரு சிக்ஸர் வீதம் அடிக்கப்பட்டது 2007 ஆம் ஆண்டு தொடரிலாகும். அந்த தொடரில் சராசரியாக 70 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் அடிக்கப்பட்டது. மொத்தமாக இம்முறை உலகக் கிண்ணத்தில் 463 சிக்ஸர்கள் பெறப்பட்டன. இது கடந்த முறை உலகக் கிண்ணத்தை விடவும் 205 சிக்ஸர்கள் அதிகமாகும்.

guptil newzealand

* சராசரியாக இம்முறை உலகக் கிண்ணத்தில் பந்துவீச்சாளர்கள் ஓவர் ஒன்றுக்கு விட்டுக் கொடுத்த ஓட்ட வீதம் 5.55 ஆகும். அதிலும் பந்து வீச்சாளர்கள் 5 அல்லது அதற்கு மேல் ஓவர்களை வீசி ஓவர் ஒன்றுக்கு 6க்கும் அதிகமான ஓட்டங்களை விட்டுக்கொடுத்த 173 சந்தர்ப்பங்கள் இம் முறை பதிவானது. இது எந்தவொரு உலகக் கிண்ணத்தை விடவும் இலகு வாக முதலிடத்தை பெற்றது.

* இம்முறை தொடரில் 15 ஓவர்களுக்கு தலா 24 அல்லது அதற்கு மேல் ஓட்டங்கள் விளாசப்பட்டன. 1999 ஆம் ஆண்டு தொடரிலிருந்து இதற்கு முந்தைய தொடர்களில் இவ்வாறான 19 மோசமான ஓவர்களே இடம் பெற்றுள்ளன. தவிர 64 ஓவர்கள் தலா 18 அல்லது அதற்கு மேல் ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த ஓவர்களாக இருந்தன.

* இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் நியுஸிலாந்தின் மார்டி கப்டில். அவர் மொத்தம் 547 ஓட்டங்களை பெற்றார். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர் ஒன்றில் நியுஸிலாந்து வீரரால் 500க்கும் அதிக ஓட்டங்கள் பெறப்பட்டது. இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் 1980 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவுடனான முக்கோண தொடரில் ஜோன் ரைட் 511 ஓட்டங்களை மொத்தமாக பெற் றுள்ளார். எனினும் உலகக் கிண்ணத்தில் அதிக மொத்த ஓட்டங்களை பெறும் முதல் நியுஸிலாந்து வீரர் கப்டில் அல்ல. முதலாவது உலகக் கிண்ணத்தில் கிளன் டேனர் பெற்ற 333 ஓட்டங்களும் அந்த உலகக் கிண்ணத்தில் முதலிடத்தை பிடித்ததோடு 1992 ஆம் ஆண்டு தொடரில் மார்டின் குரோ 456 ஓட்டங்களை பெற்று முதலிடத்தை பிடித்தார்.

sanga

* இம்முறை தொடரில் சங்கக்கார மொத்தம் 541 ஓட்டங்களை எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தார். ஆனால் அவர் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்ஸ்களில் ஆட்டமிழக்காமல் 326 ஓட்டங்களை பெற்றது விசேட அம் சமாகும். இவ்வாறு ஆட்டமிழப்புக்கு இடையில் உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்களை பெற்றவர் என சங்கக்கார சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ரிக்க பொன்டிங் ஆட்டமிழப்புக்கு இடையில் பெற்ற 253 ஓட்டங்கள் முந்தைய தொடர்களில் அதிமாக இருந்தது. இதன்போது 2003 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காது 140 ஓட்டங்களை எடுத்த பொன்டிங் 2007 உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் 113 ஓட்டங்களை பெற்றார். எனினும் இம்முறை தொடரின் காலிறுதியில் ஆட்டமிழக்காது 237 ஓட்டங்களும் பின்னர் அரையிறுதியில் 34 ஓட்டங்களையும் பெற்று பொன் டிங்கை கப்டில் முந்தினார்.

* இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மொத்தம் 8 சதங்களை பெற்றது ஏனைய அணிகளை விடவும் அதிகமாகும். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்திலும் இலங்கை வீரர்களே அதிக சதங்களை குவித்தனர். அந்த தொடரில் இலங்கை அணியினர் 7 சதங்களை பெற்றனர். மொத்தமாக உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியினர் 23 சதங்களை பெற்றுள்ளனர். அதில் 15 சதங்கள் கடைசி இரண்டு தொடர்களிலும் மாத்திரம் பெறப்பட்டுள்ளது. இலங்கையை விடவும் உலகக் கிண்ணத்தில் இந்தியா (25) மற்றும் அவுஸ்திரேலியா (26) அதிக சதங்களை பெற்றுள்ளன.

Published by

Leave a comment