கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மிக் ரக விமான கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக முன்னாள் விமானப்படை தளபதி மற்றும் முன்னாள் பதவிநிலை பிரதானி எயார் மாஷல் எடானாலட் பெரேரா கொழும்பு கொள்ளுப்பிட்டி நிதி மோசடி விசாணைப் பிரிவினால் அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக முன்னாள் விமானப்படை தளபதியான ரொஷான் குணதிலக்கவிடமும் நிதி மோசடி விசாணைப் பிரிவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Published by

Leave a comment