நைஜீரிய தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் புகாரி வெற்றி முகம்

nigeriaஅபூஜா: நைஜீரியப் பொதுத்தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளர், முகமது புகாரி, வெற்றி பெறும் நிலையில் இருப்பது போல் தெரிகிறது.தற்போதைய அதிபர் குட்லக் ஜோனதன், புகாரியுடன் தொலைபேசியில் பேசி, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

நாட்டின் ஒரு மாகாணத்தில் மட்டுமே, வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், புகாரி, தற்போதைய அதிபர் குட்லக் ஜொனாதனை விட சுமார் மூன்று மிலியன் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார். அவரது வாக்கு வித்தியாசம் முறியடிக்கப்பட முடியாததென்று கூறப்படுகிறது.

நாட்டில் 1999ம் ஆண்டு ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்ததிலிருந்து, ஆளுங்கட்சியான பி.டி.பி தேர்தலில் தோல்வியடைவது, பதவியிலிருக்கும் அதிபர் தேர்தலில் தோற்பதும் இதுவே முதல்முறையாகும். புகாரியின் சொந்த ஊரான கட்சினாவில், புகாரியின் ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.

nigeria
மகிழ்ச்சி வெள்ளத்தில் புகாரியின் ஆதரவாளர்

முன்னதாக நைஜீரியாவின் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குகள் எண்ணப்படும் முக்கியமான மையத்தில் குழப்பமான காட்சிகள் நிலவின. தேர்தல் கமிஷனை பாரபட்சமாக நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டிய , ஆளும் ஜனநாயக மக்கள் கட்சியின் பிரதிநிதி எல்டர் ஒருபேபே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது இடையூறும் விளைவித்தார்.

தலைநகர் அபூஜாவில் அமைந்துள்ள தொகுப்பு மையத்தில் உள்ள பிபிசி ஹாஸா சேவையின் ஆசிரியர் கூறும்போது, இந்த எதிர்ப்பு , தற்போது பதவியில் உள்ள குட்லக் ஜோனதன் தேர்தலில் தோல்வியை தழுவப்போவதை அறிவுறுத்துவதாகத் தெரிவித்தார்.

Published by

Leave a comment