-
புதன் கிரகத்தில் மோதப்போகும் நாஸாவின் மெஸ்ஸஞ்சர் விண்கலம்
நியுயோர்க்: நாஸாவின் மெஸ்ஸஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தின் மேற்பரப்பில் மோதவுள்ளது. இந்த விண்கலத்தின் எரி பொருள் தீர்ந்துவரும் நிலை யில் அது வரும் ஏப்ரல் 30ஆம் திகதி அளவில் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
-
ஆசிய விருது விழாவில் சங்கக்காரவுக்கு விருது
லண்டன்: லண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்காராவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 5ஆவது ஆசிய விருது வழங்கல் விழா லண்டனிலுள்ள கவர்னர் ஹவுஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
-
நாளை விவாதத்துக்கு வருகிறது19ஆவது திருத்தம்
கொழும்பு: நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக 100 நாட்கள் வேலைத்திட்டத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசாங்கத்தின் முன் காணப்படும் பாரியதொரு சவால் 19வது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதாகும்.
-
காத்தான்குடி வருகிறார் தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை அய்யூப்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் மற்றும் தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் ஹாமிம் பிர்தௌஸி ஆகியோர் கலந்து கொள்ளும் மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் இம்மாதம் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பாலமுனை,காங்கேயனோடை பிரதேசத்திலும் இடம்பெறவுள்ளது.
-
அகதிகள் படகு மூழ்கியதில் 650 பேர் பலியாகியிருக்கலாம்
ரோம்: குடியேற்றக்காரர்களை ஏற்றிவந்த படகு ஒன்று லிபிய கடலோரமாக மூழ்கியதில் குறைந்தபட்சம் 650 பேராவது நீரில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. குடியேற்றக்காரர்கள் ஐரோப்பாவுக்கு கடல் கடக்கும் நடவடிக்கையில் மிக அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் இது என்று ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் உறுதி செய்துள்ளது.
-
தேர்தல் முறை மாற்றம் பற்றிய 20 ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பிலான ஆலோசனைகள் முன்வைப்பு
– புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் கொழும்பு: தேர்தல் முறை மாற்றம் பற்றிய 20 ஆவது யாப்புத் திருத்தம் தொடர்பிலான ஆலோசனைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முடிவு செய்யப்பட்டு ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
-
கட்டாரில் ‘கருத்து வேறுபாடுகளும் ஸஹாபாக்களும்’ எனும் தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி ஸனாஇய்யா: கட்டாரில் ‘கருத்து வேறுபாடுகளும் ஸஹாபாக்களும்’ எனும் தலைப்பில் விஷேட பயான் நிகழ்ச்சி நாளை 20 திங்கட்கிழமை இரவு 8.00 மணி முதல் 8.45 மணி வரை பனார் இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஸனாஇய்யாக் கிளையில் இடம்பெறும்.
-
கிழக்கு மலேசிய சரவாக் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக கல்லூரியின் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வுடன் சந்திப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேசியா நாட்டின் ‘சரவாக்’தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக கல்லூரியின் பிரதிநிதிகள் இன்று 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை அவரது காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து சந்தித்தனர்.
-
காத்தான்குடி-அல்-ஹிறா மகா வித்தியாலயம் (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் சிரமதான நிகழ்வு 19-04-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத் தலைவர் மீது அதிருப்தி தெரிவித்து பிரதேசவாசி எழுதியுள்ள கடிதம்
காத்தான்குடி: காத்தான்குடியின் தாய் நிறுவனமெனச் சொல்லப்படும் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் ஊஊ அவர்களின் நடவடிக்கைகள் குறித்து புதிய காத்தான்குடி 03, தக்வா வீதி இல: C 13/4 எனும் முகவரியைச் சேர்ந்த ஏ.எம். பர்சாத் என்பவர் தனது அதிருப்தியைத் தெரிவித்து சம்மேளன நிர்வாக சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
-
வெளிநாடுகளில் தொழில் புரிவோர் நலன்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும்
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: இந்த நாட்டின் மொத்த வெளிநாட்டுச் செலாவணியில் கணிசமான பகுதியை மத்திய கிழக்கில் தொழில் புரிவோரே உழைக்கின்றார்கள், சுமார் ஏழு பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகப் பற்றக்குறையை ஈடு செய்வதில் அவர்களது வைப்புக்கள் கணிசமான பங்களிப்பினை செய்கிறது.
-
ஜூம்ஆ பிரசங்கம் ஒலிப்பதிவு
ஒலிப்பதிவு – M.N. அஹமட் ஆஸிர் பயான் நிகழ்த்தியவர் – அஷ் ஷெய்க் பாயிஸ் (ஹுமைதி) (விரிவுரையாளர், தாருல் ஆயிஷா பெண்கள் அரபுக் கல்லூரி, அக்குறனை) தலைப்பு – பிள்ளை பராமரிப்பும் பெற்றோரின் பங்களிப்பும் என்ன? இடம் – மீரா ஜும்ஆப் பள்ளிவாயல், காத்தான்குடி – 01