லண்டன்: லண்டனில் இடம்பெற்ற ஆசிய விருது வழங்கும் விழாவில் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர் குமார் சங்கக்காராவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 5ஆவது ஆசிய விருது வழங்கல் விழா லண்டனிலுள்ள கவர்னர் ஹவுஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இவ்விழாவில், இலங்கை கிரிக் கெட் அணியின் முன்னணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு, விளையாட்டுத்துறையில் சிறந்த பங்களிப்பாற்றியவருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இவ்விருதினை 2011ஆம் ஆண்டில் முத்தையா முரளிதரன் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இந்த விருதை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி வென்றதோடு, 2010 ஆம் ஆண்டு இந்த விருது விழா முதல் முறை நடத்தப்பட்டபோது சச்சின் டென்டுல்கர் விளையாட்டுத்துறையில் சிறந்த பங்களிப்பாற்றியவருக்கான விருதை வென்றிருந்தார்.
இங்கிலாந்து முன்னாள் கால்பந்து அணி வீரர் கரி லங்கர் சங்கக்காரவுக்கான விருதை வழங்கினார்.
Published by


Leave a comment