அகதிகள் படகு மூழ்கியதில் 650 பேர் பலியாகியிருக்கலாம்

boat shipரோம்: குடியேற்றக்காரர்களை ஏற்றிவந்த படகு ஒன்று லிபிய கடலோரமாக மூழ்கியதில் குறைந்தபட்சம் 650 பேராவது நீரில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. குடியேற்றக்காரர்கள் ஐரோப்பாவுக்கு கடல் கடக்கும் நடவடிக்கையில் மிக அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் இது என்று ஐநாவின் அகதிகளுக்கான நிறுவனம் உறுதி செய்துள்ளது.

20 கப்பல்களும், ஒரு விமானமும் பங்கெடுக்கும் மீட்பு நடவடிக்கையை இத்தாலில் ஒருங்கிணைக்கின்றது. இதுவரை 50 பேர் மாத்திரம் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

boat ship
மீட்புப்பணி தொடர்கின்றன.

அந்த மீன்பிடிப் படகில் இருந்து இன்னுமொரு சரக்கு கப்பலுக்கு ஏறுவதற்காக, அனைவரும் முண்டியடித்துக்கொண்டு படகின் ஒரு புறத்துக்கு நகர்ந்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் கூறுகின்றன.

Published by

Leave a comment