காத்தான்குடி: தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் கோவை எஸ். அய்யூப் மற்றும் தென்னிந்திய மார்க்க பிரச்சாரகர் ஹாமிம் பிர்தௌஸி ஆகியோர் கலந்து கொள்ளும் மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் இம்மாதம் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பாலமுனை,காங்கேயனோடை பிரதேசத்திலும் இடம்பெறவுள்ளது.
ஆண்களுக்கான மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் ஏப்ரல் 22ம் திகதி புதன்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்திலும்,ஏப்ரல் 23ம் திகதி வியாழக்கிழமை பூநொச்சிமுனை கடற்கரையிலும்,ஏப்ரல் 24ம் திகதி வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் கடற்கரையிலும்,ஏப்ரல் 25ம் திகதி சனிக்கிழமை காங்கேயனோடை அல் அக்ஸா மைதானத்திலும்,ஏப்ரல் 26ம் திகதி காத்தான்குடி-06 பஸ்மலா சதுக்கத்திலும்,ஏப்ரல் 27ம் திகதி பாலமுனை அம்மார் ஜூம்ஆ பள்ளி அருகிலும் மாலை நேரங்களில் பிற்பகல் 06.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும் ,பெண்களுக்கான மார்க்க பிரச்சாரக் கூட்டங்கள் ஏப்ரல் 23ம் திகதி வியாழக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திலும்,ஏப்ரல் 25ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஜாமிஉல் அதர் ஜூம்மா பள்ளிவாயலிலும் காலை 10.மணிக்கு இடம்பெறவுள்ளதாக தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவூப் தெரிவித்தார்.
இதில் அணைத்து இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளையும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது.
Published by


Leave a comment