நியுயோர்க்: நாஸாவின் மெஸ்ஸஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தின் மேற்பரப்பில் மோதவுள்ளது. இந்த விண்கலத்தின் எரி பொருள் தீர்ந்துவரும் நிலை யில் அது வரும் ஏப்ரல் 30ஆம் திகதி அளவில் புதன் கிரகத்தில் மோதி நொறுங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
‘புதன் கிரகத்தின் பூமிக்கு எதிர்ப்புறமாக இருக்கும் திசை யில் விண்கலம் மணிக்கு 8,750 மைல்கள் வேகத்தில் சென்று மோதும்’ என்று அறிக்கை ஒன்றை வெளி யிட்டு நாஸா குறிப்பிட்டுள் ளது.
“விண்கலம் மோதும் என்று எதிர்பார்க்கப்படும் இடத்தை சமகாலத்தில் அவதானிக்க முடியாதுள்ளது” என்று அந்த அறிவிப் பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதன் கிரகத்தின் மேற்பரப்பு குறித்து ஆய்வு நடத்த கடந்த 2004 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட மெஸ்ஸஞ்சர் விண்கலம் 2011 ஆம் ஆண்டு புதன் கிரகத்தின் நீள் வட்ட சுற்று பாதையை சென்றடைந்தது. இந்த விண்கலம் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வந்தது.
அதன் நடவடிக்கைகளை மேர் லேண்ட் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பௌதீகவியல் ஆய்வகத்தில் இருந்தபடியே நாஸா விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர்.
இதன்போது மெஸ்ஸஞ்சர் விண்கலம் புதன் கிரகத்தில் பல கண்டுபிடிப்புகளையும் மேற்கொண்டது. இதில் புதன் கிரகத்தில் நிரந்தர நிழல் படிந்த துருவப்பகுதியில் உறைந்த நீர் மற்றும் ஏனைய ஆவியாகும் மூலப்பொருட்கள் இருப்பதை 2012 ஆம் ஆண்டு கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Published by

Leave a comment