Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கட்டுநாயக்கா வந்த மலேசியா விமானம் திரும்பிச் சென்றது ஏன்?

    கொழும்பு: போதையிலிருந்த பயணி ஒருவரின் தொந்தரவு காரணமாக கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கவிருந்த மலேஷிய எயார்லைன்ஸ் விமானம் கோலாலம்பூர் திரும்பிச் சென்றுள்ளது. சனிக்கிழமை பின்னிரவு 11.27 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட எம்.எச்.179 என்ற விமானமே இவ்வாறு சென்றுள்ளது.

  • இளைஞர் சேவை அதிகாரி ஹனீபாவின் இடமாற்றத்தில் நடந்தது என்ன? அரசியல் பழிவாங்கலா? அதிகார துஷ்பிரயோகமா?

    – ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் கல்குடா: இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம் நல்லாட்சி நிலவுகின்ற எம் நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் நல்லாட்சி பிழையாக விமர்சிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றம் தொடர்பில் ஒரு உண்மை மறைக்கப்பட்டு பிழையான கருத்தாடல்கள் கல்குடா முஸ்லிம் பிரதேச

  • EPFயில் மூன்று இலட்ச ரூபாவுக்கு மேல் பணம் இருக்குமானால், 30 வீதத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும்

    கொழும்பு: ஊழியர் சேமலாப நிதியத்தில் மூன்று இலட்ச ரூபாவுக்கு மேல் பணம் இருக்குமானால், அதில் 30 வீதத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள இயலும். இதுபற்றி தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார். அவசர நோய்களுக்குச் சிகிச்சை பெறல், வீட்டை நிர்மாணித்தல் போன்ற அவசரத் தேவைகளுக்கு மட்டுமே இந்த பணத்தொகையை பெற இயலும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.

  • தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் இன்று சர்வ கட்சி கூட்டம்

    கொழும்பு: தேர்தல்முறை மாற்றம் தொடர்பாக ஆராயும் சர்வகட்சிக் கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது. பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக அமைச்சரவையில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டிருப்பதுடன், மேலும் சில யோசனைகளும் முன்மொழியப்பட்டுள்ளன.

  • உதயங்கவை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை

    கொழும்பு: ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்காவைக் கைது செய்வதற்காக இலங்கைக்கும், உக்ரேனுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் பேரில் இலங்கை பொலிஸ் புலனாய்வுக் குழு கடந்த வாரம் உக்ரேனுக்குச் சென்றுள்ளது. இவரைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு பெறப்பட வுள்ளது. கடந்த ஜனவரி 09 முதல் இவர் தலைமறைவாகி உள்ளார்.

  • இரவு பகல் உறக்கம் இன்றி புரப்படுவோம் வடபுல முஸ்லிம் சமூகத்தின பாதுகாப்பு அரண் பாதுகாவலராய்-ஓர் பகிரங்க அழைப்பு

    – வன்னிக் குரலான் வன்னி: இனவாதம் இன்று உச்சாந் தலையில் அமர்ந்திருந்து ஆட்டி படைக்கும் காலமாக மாறிவருகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பாட்டை கொண்ட சக்திகள் ஒரே கூட்டில் இருந்து இதனை இயக்கி கொண்டிருக்கின்ற நிலையினை உணர முடிகின்றது.

  • ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திற்கு தெரிவான காத்தான்குடி மாணவர்கள் இருவரையும் கௌரவிக்கும் நிகழ்வு

    எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: மிகப்பெரும் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி பல கல்விமான்களையும் பல அறிஞர்களையும் உருவாக்கி முஸ்லிம் சமூகத்திற்கே பெருமை தேடித்தந்த ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திற்கு இம்முறை தெரிவான காத்தான்குடி மாணவர்கள் இருவரையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்றது.

  • கோறளைப்பற்று மேற்கு இக்பால் இளைஞர் கழகத்தின் ‘நல்ல நூற்கள் நல்ல நண்பர்கள்’ எனும் விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் இக்பால் இளைஞர் கழகத்தின் கல்வி பிரிவின் இவ்வாண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் ‘நல்ல நூற்கள் நல்ல நண்பர்கள்’ எனும் விஷேட செயற்றிட்டத்திற்கமைவாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்றம் வெளியீட்ட’வாழ்வது நம் கையில்’ எனும் நூற்தொகுதிகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது நூலகங்களுக்கு வழங்கும் நடவடிக்கை கழகத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

  • சிரேஷ்ட சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

    ஹாசிப் யாஸீன், எம்.ஐ.சம்சுதீன் சாய்ந்தமருது: சட்டத்துறையில் 50 வருடத்தை பூர்த்தி செய்த சிரேஷ்ட சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

  • ராஜபக்சர்களினால் மேற்கொள்ளபட்டுவரும் கீழ்த்தரமான சூழ்ச்சிகள்

    கொழும்பு: முன்னாள் அரசாங்கத்தின் பிரபல இராணுவ அதிகாரி ஒருவரும் சாதாரண இராணுவ அதிகாரிகள் சிலருடன் இணைந்து இலங்கைக்கும், இராணுவத்தினர் உட்பட படையினருக்கும் எதிராக சூழ்ச்சி திட்டம் ஒன்றை தீட்டி வருவதாக தகவல்கள் அம்பலமாகியுள்ளன.மகிந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிக்கு எதிராக தற்போது நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் சிக்கலில் விழுந்துள்ள ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர்,

  • கட்டுநாயக்க நோக்கி வந்த மலேசிய விமானம் மீண்டும் மலேசியா நோக்கிச் சென்றுள்ளது

    கொழும்பு: கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த மலேசிய விமானம் ஒன்று, மீண்டும் அவசரமாக திரும்பிச் சென்றுள்ளது. நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற விமானமே இவ்வாறு மீண்டும் மலேஷியாவுக்கு திரும்பி சென்றுள்ளது.

  • தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சியினை சீர் செய்து தருமாறு கோரி பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடிதம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான், ஏ.எல்.டீன்பைரூஸ் காத்தான்குடி: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ஒலிபரப்பப்படும் முஸ்லிம் நிகழ்ச்சி கிழக்கு மாகாணத்தில் தெளிவற்ற நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலிலும் இருந்து ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சிகளையும், மார்க்க விடயங்களையும் கேட்க முடியாத ஓர் அசௌகரிய நிலையினை கிழக்கு மாகாண மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

←Previous Page
1 … 439 440 441 442 443 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar