கொழும்பு: கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த மலேசிய விமானம் ஒன்று, மீண்டும் அவசரமாக திரும்பிச் சென்றுள்ளது. நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற விமானமே இவ்வாறு மீண்டும் மலேஷியாவுக்கு திரும்பி சென்றுள்ளது.
குறித்த விமானம் என்ன காரணத்திற்காக திரும்பிச் சென்றது என இதுவரை தெரியவரவில்லை.
எனினும், விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Published by


Leave a comment