Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • டேவிட் கமெரோனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

    கொழும்பு: பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள டேவிட் கமெரோனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அத்துடன் பிரித்தானியாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக் கொண்டு ஒத்துழைப்புடன் முன்னோக்கி நகர்வதற்கு இலங்கை எதிர்பார்த்திருக்கின்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

  • ஐ.தே.கட்சியின் முகமூடிகளைக் கிழித்தெறிந்து பிரச்சாரத்தை மேற்கொள்வோம்! – ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பொதுச் செயலாளர் புவி

    புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் (பொதுச் செயலாளர் – ஜனநாயகக் கட்சி – காத்தான்குடி மண்டல மத்திய குழு) காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும், முஸ்லிம்களின் உரிமைகளையும் கேள்விக்குறியாக்கி வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் சுயரூபத்தை எதிர்வரும் காலங்களில் எமது ஜனநாயகக் கட்சி மக்கள் மத்தியில் வெளிப்படுத்தும் என அக்கட்சியின் காத்தான்குடி மண்டல பொதுச் செயலாளர் புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் தெரிவித்தார்.

  • காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கையடக்க தொலைபேசி வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள கையடக்க தொலைபேசி வர்த்தக நிலையம் ஒன்றில் 09-05-2015 இன்று சனிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

  • டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது தொண்டர் சேவை பணிகளில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நடாத்தப்பட்ட டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது தொண்டர் சேவை பணிகளில் ஈடுபட்ட காத்தான்குடி (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 09-05-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் காரியாலத்தில் இடம்பெற்றது.

  • சூட்கேசுக்குள் மறைத்து சிறுவனை கடத்திய யுவதி: காட்டிக்கொடுத்த ஸ்கேனர்

    – AF-89 மெட்ரிட்: வட ஆப்ரிக்காவில் ஸ்பெயினுக்குச் சொந்தமான பிரதேசமான, சியுட்டாவில், எட்டு வயதுச் சிறுவன் ஒருவனை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கேன் மூலம் இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் சிறுவனைக் கடத்திய இளம்பெண்ணை கைது செய்தனர்.

  • ‘போத்தலில் அடைந்த நீரினை கூட ரவூப் ஹக்கீமினால் கல்குடாக்கு கொடுக்க முடியாது’: அமீர் அலி (காணொளி)

    – ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

  • “தமிழர், முஸ்லிம்களுக்கு அநீதிகள் என்னை மீறியே நடந்தன, இவற்றுக்கு நான் பொறுப்பல்ல”: மஹிந்த

    கொழும்பு: “எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர் பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தூரமானதாகவும் குறிப்பிட்டார்.

  • ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிலிருந்து இராணுவத்தினர் நீக்கம்

    கொழும்பு: ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் அப்பிரிவில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். நிர்வாக தேவைகள் காரணமாக முன்னாள் ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி பாதுகாப்பு படையே (Presidential Guard) கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டு அப்பிரிவிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  • பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 27 பேருக்கு பிணை

    கொழும்பு: நீதிமன்ற உத்தரவையும் மீறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பிக்குகள் உட்பட 27 பேர் நேற்று தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் தனிநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

  • “வாக்களிப்பது ஷிர்க்”: பிரித்தானியாவில் இஸ்லாமிய ‘பெயர்தாங்கிகள்’ எச்சரிக்கை

    – MJ லண்டன்: நேற்று முன்தினம் மே 7ம் திகதி பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போது, கிழக்கு லண்டன் பிரதேசத்தில் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்களை நோக்கி “வாக்களிப்பது இஸ்லாத்தில் இல்லை” எனவும், “வாக்களிப்பது இறை நிராகரிப்பானது” “அது ஒரு ஷிர்க்” எனவும் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கிய சில பெயர்தாங்கி முஸ்லிம்கள் ஈடுபட்டிருந்தது பிரித்தானியாவில் தற்பொழுது பல சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

  • ‘முதுகெலும்பில் ஒரு எலும்பிலாவது ஆத்ம கௌரவம் இருக்குமானால் மகிந்த ராஜபக்ச வெட்கமின்றி ஜனாதிபதி மைத்திரிபாலவின் காலடிக்கு சென்று பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு கேட்டிருக்கமாட்டார்’

    களுத்துறை: முதுகெலும்பு பலமிருந்து, முதுகெலும்பில் ஒரு எலும்பிலாவது ஆத்ம கௌரவம் இருக்குமானால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெட்கமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலடிக்கு சென்று பிரதமர் வேட்பாளராக நிறுத்துமாறு கேட்டிருக்கமாட்டார்.இவ்வாறு ஜனநாயகக் கட்சியின் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

  • ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகத்தின் ஏற்பாட்டில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று காத்தான்குடியில் இடம்பெற்றது

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகத்தின் (SRD) ஏற்பாட்டில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் இடம்பெற்றது. அதன் தலைவர் Dr. எம் ஏ ஹாதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் எம் ஐ ஷேகு அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன்

←Previous Page
1 … 440 441 442 443 444 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar