ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திற்கு தெரிவான காத்தான்குடி மாணவர்கள் இருவரையும் கௌரவிக்கும் நிகழ்வு

unnamed1எம்.எச்.எம்.அன்வர்

காத்தான்குடி: மிகப்பெரும் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி பல கல்விமான்களையும் பல அறிஞர்களையும் உருவாக்கி முஸ்லிம் சமூகத்திற்கே பெருமை தேடித்தந்த ஜாமியா நளீமிய்யா கலாபீடத்திற்கு இம்முறை தெரிவான காத்தான்குடி மாணவர்கள் இருவரையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்றது.

ராபிதா அந்நளீமிய்யீன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ் எம் கே எம் ஜாபிர் நளீமி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷெய்ஹ் எம் ஐ அப்துல் கபூர் மதனி பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.

ஜாமியா நளீமிய்யாவின் சிறப்பம்சங்கள் கல்வியால் உயர்ந்த சமூகமே வெற்றி பெற்ற சமூகம் நளீமிய்யாவில் கற்றவர்கள் இன்று பல தலைமை நிறுவனங்களில் காணப்படுவதாகவும் ஸ்தாபகர் மர்ஹும் நளீம் ஹாஜியாரின் தூர நோக்கும் அவரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த கலாபீடம் மாபெரும் கல்விப்புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது உரையில் தெரிவித்தார்

மேற்படி நிகழ்வுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் எம் எம் சுபைர், மௌலவி ஏ ஜி எம் அமீன் பலாஹி, உதவிப்பிரதேச செயலாளர் எம் அன்ஸார் நளீமி, சட்டத்தரணி ஏ ஏ உவைஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment