கோறளைப்பற்று மேற்கு இக்பால் இளைஞர் கழகத்தின் ‘நல்ல நூற்கள் நல்ல நண்பர்கள்’ எனும் விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் இக்பால் இளைஞர் கழகத்தின் கல்வி பிரிவின் இவ்வாண்டுக்கான வேலைத்திட்டத்தின் கீழ் ‘நல்ல நூற்கள் நல்ல நண்பர்கள்’ எனும் விஷேட செயற்றிட்டத்திற்கமைவாக இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்றம் வெளியீட்ட’வாழ்வது நம் கையில்’ எனும் நூற்தொகுதிகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது நூலகங்களுக்கு வழங்கும் நடவடிக்கை கழகத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம்.றம்சியின் வழிகாட்டுதலில் இடம்பெற்றுவரும் இளைஞர் நல வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக இக்பால் இளைஞர் கழகம் இதனை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதன் போது நூலின் பிரதியினை ஒட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம் நௌபலுக்கும்,உதவித்திட்டமிடல் அதிகாரி எச்.எம். றுவைதுக்கும், ஒட்டமாவடி பிரதேச சபை செயலாளர் சாபிக்கும் வழங்கி இவ் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம்.றம்சி, கழகத்தின் உப செயலாளர் சஜீர்,அமைப்பாளர் எம்.எஸ்.அல்-அமீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த கழகத்தின் செயலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் ‘இளைஞர்கள் என்பவர்கள் இந்நாட்டின் தேசிய சொத்து இளைஞர்கள் விளையாட்டுடன் மாத்திரம் தான் பின்னிப்பினைத்துள்ளார்கள் என பலர் நினைத்து கொண்டும் இளைஞர்களை ஆபத்தானவர்களாக நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

சமூக பொறுப்புக்களை இளைஞர்களுக்கு வழங்குவதில் தயக்கம் செலுத்துகின்றனர்.

எமது இளைஞர் கழகத்தின் உறுதியுரைக்கமைவாக ஒற்றுமை, நட்பு, ஒத்துழைப்பு, அபிவிருத்தி ஆகிய நான்கு பிரமாணங்களுக்கமைவாக இளைஞர் தேசிய கொள்கைகளுக்கமைவாகவும் எமது மாவட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு ஏணைய கழகங்களுக்கு முன்மாதிரியாக மிளிர்வதே எமது நோக்கம் எனத் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தனது பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் நல வேலைத்திட்டங்களை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்ல தாம் முழு உதவியினையும்,ஒத்துழைப்புக்களையும் வழங்குவதாக குறிப்பிட்டார்.

unnamed

unnamed1

Published by

Leave a comment