இரவு பகல் உறக்கம் இன்றி புரப்படுவோம் வடபுல முஸ்லிம் சமூகத்தின பாதுகாப்பு அரண் பாதுகாவலராய்-ஓர் பகிரங்க அழைப்பு

north– வன்னிக் குரலான்

வன்னி: இனவாதம் இன்று உச்சாந் தலையில் அமர்ந்திருந்து ஆட்டி படைக்கும் காலமாக மாறிவருகின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பாட்டை கொண்ட சக்திகள் ஒரே கூட்டில் இருந்து இதனை இயக்கி கொண்டிருக்கின்ற நிலையினை உணர முடிகின்றது.

அன்று தம்புள்ளயில் ஆரம்பித்த தாக்குதல் சம்பவம் சிறிது காலம் ஓய்வெடுத்திருந்த போதும் மீண்டும் அதனது செயற்பாடுகள் தற்போது வில்பத்து காட்டு வனப்பகுதிக்குள் இருந்து ஆரம்பித்துள்ளது.

அரச நிர்வாகம் ஒரு புறம் இருக்க இனவாதிகளின் காட்டு தர்பார் இன்று இந்த மைத்திரியின் நல்லாட்சியில் மீண்டும் தலை துாக்க ஆரம்பித்துள்ளது.இந்த தாக்குதலின் இறுதி இலக்கு எதுவென்று தெரியாத அளவுக்கு இன்று எமது முஸ்லிம் மக்கள் பரிதாபகரமான நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

சிங்கள ராவய,பொதுபலசேன உள்ளிட்ட இன்னோரன்ன இனவாத அமைப்புக்கள் ஏற்கனவே முஸ்லிம்களுக்கும்,சிறுபான்மை சமூகத்திற்கும் எச்சரிக்கைவிடுத்துள்ளது.முஸ்லிம்களின் எதிர்காலம் சூன்யமாக்கப்படும் என்று இதிலிருந்து நாம் விழித்துக் கொள்ள தவறுவோமெனில் எம்மை விட அறிவிழிகள் யார் இருப்பார்கள் என்று சிந்திக்க கூட நேரம் இருக்காது.இந்த அராஜக சக்திகளுக்கு உதவியாக வன்னி மாவட்டத்தின் அரசியல் பிரதி நிதியொருவர் மிகவும் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பது இன்று தெளிவாகிவிட்டது.

இன ஒடுக்கர்கள் தமது கெமராக்களுடன் காட்டுக்குள் முகாமிட்டுள்ளனர் .அவர்கள் தினந்தோறும் அவர்களது தொலைக்காட்சியில் கூலிப்படைகள் அனுப்புவதை அப்படியே போட்டு இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க தேவையான அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டியும் வருகின்றனர்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் பிழையான செய்திகளை இந்த ஊடகங்களுக்கு வழங்குபவர்கள் வரிசையில் வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் என்று கூறிக் கொள்ளும் ஒருவர் இருக்கின்றார் என்ற செய்தியினை வன்னி மாவட்டத்தின் ஜக்கிய தேசிய கட்சியின் மற்றுமொரு பெரும்பான்மை அமைப்பாளர் தெரிவி்த்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்த நிலையில் சக்திக்கு செய்தி கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினராக இந்த ஆசாமி அவரது கிராமத்தை சேர்ந்த இருவரை தயார்படுத்தி கழுத்தையும் முகத்தையும் காட்டாமல் குரலை மட்டும் காட்டி யார் என்று அடையாளம் காட்டாமல் இருக்க எடுத்த முயற்சியினை மக்கள் அறியாமலில்லை.இந்த ஆசாமியின் தெளிவான நோக்கம் முசலி மீள்குடியேற்றம் தடைபடுகின்ற போது அந்த பழியினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது போட்டுவிட்டு தாம் நல்ல பிள்ளை போன்று மக்களிடம் சென்று வாக்கு பிச்சையெடுத்து கொழும்பில் சொகுசு வாழ்க்கை வாழுவதற்கு என்ற விடயத்தையும் மக்கள் அறியாமல் இல்லை.

இன்று கொழும்பு புற நகர பகுதியில் நடந்த பௌத்த மத வகுப்பு மாணவர்களின் பரிசளிப்பு விழாவொன்றில் கலந்து கொண்ட சிலரத்ன ஹிமி என்னும் பௌத்த பிக்கு ஒருவர் அங்கு எதை பேச வேண்டுமோ அதனை விடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் தொடர்பில் பல நிமிடங்கள் பேசியுள்ளார்.இதிலிருந்து தெளிவாகின்றது இன ரீதியாக பாடசாலை மாணவர்களையும் தயார் படுத்தும் கொன்தரத்து இடம் பெறுகின்றது.இந்த ஹிமியின் பேச்சானது முஸ்லிம்களை தற்போதுள்ள இடத்தில் இருந்து அகற்றி வேறு இடத்தில் அமரச் செய்யுமாறு,இவரது பேச்சு நகைப்புக்கிடமானது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த மக்களின் அரசியல் பிரதிநிதியாக நின்று எத்தனை சவால்களையும்,உயிர் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யும் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார்.இதற்கு ஆதரவாக இந்த அரசாங்கத்தில் இருக்கும் எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் வாய்த்திறக்காமல் மௌனிகளாக இருக்கும் நிலையில் மக்கள் விடுதலை முன்னணயின் பிரதி நிதி லால் காந்த மற்றும் அமைச்சர் சம்பிக்க பாட்டலி ரணவக்க போன்ற பெரும்பான்மை சமூக அரசியல் பிரமுகர்கள் முசலியில் இடம் பெறும் மீள்குடியேற்றம் சட்ட பூர்வமானது என்பதை பகிரங்கமாக கூறியுள்ளனர்.இது பாராட்டப்படக் கூடியதொன்று ,இதற்கு மாற்றமாக எமது முஸ்லிம் பெயர் தாங்கிய அரசியல் தலைமைகள் துாங்கிக் கொண்டு இருப்பது கண்டனத்துக்குரியது.தேர்தல் காலத்தில் உரிமைக் குரல் பேசும் கட்சிகள் இந்த மக்கள் தமது வாழ்விடங்களில் இருந்து வி்ரட்டப்படகின்ற போது கண்ணிருந்தும் குருடர்களாக இருப்பது இந்த பெரும்பான்மை கடும் போக்கு இனவாதிகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த கட்சிக்காரர்களுக்கு பொது எதிரியாக மாறிவிட்டார் போலும்,அதனால் தான் சிறுபான்மை கட்சிகளிலும்,பெரும்பான்மை கட்சிகளிலும இருக்கும் முஸ்லிம் நாமம் கொண்ட அரசியல்வாதிகள் ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.மஹிந்த ராஜபக்ஷவின் அரசு முஸ்லிம்களை சீண்டிய போது இந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அமைதியாக இருந்திருந்தால் இந்த அரசியல் வாதிகள் என்ன செய்திருப்பார்கள்.ஆனால் சமூகம் என்று வருகின்ற போது அதற்காக துணிந்து சென்று போராட்டங்கள சந்தித்த ஒருவராக இந் றிசாத் பதியுதீனை ஏன் நோக்க இந்த அரசியல்வாதிகள் மறுக்கின்றனர்.

எது எப்படி இருந்தாலும் அநியாயம் இழைக்கப்பட்ட ஒரு சமூகத்தற்காக தியாகத்துடன் செயற்படும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சேவை ஒரு போதும் முடக்கப்படக் கூடாது என்பதில் நாம் விடாப் பிடியாக இருக்கின்றோம்.

குறிப்பாக உலமாக்கள் , சட்ட வல்லுநர்கள்,தொழிலதிபர்கள்,கல்வி மாண்கள் ஏன் பாடசாலை மாணவர்கள் மற்றும் எழுத்தாற்றல்கள் கொண்டவர்கள்,கலைஞர்கள் தமது பலத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த வில்பத்து ஆரம்பம் நாட்டு முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது இனவாதிகள் ஆரம்பித்துள்ள மற்றுமொரு போரின் வெளிப்பாடாகும்.நாம் பிரிந்து நின்று பிரதேசவாதம் பேசி இழப்புக்களை எற்படுத்தியது போதும்,எமது திறமைகளை நாமே மெச்சி பெருமையடித்தது போதும்,இனி இரவு பகல் உறக்கம் இன்றி புரப்படுவோம் சமூகத்தின் பாதுகாப்பு அரண் பாதுகாவலராய்.

Published by

Leave a comment