தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சியினை சீர் செய்து தருமாறு கோரி பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடிதம்

Shibly– பழுலுல்லாஹ் பர்ஹான், ஏ.எல்.டீன்பைரூஸ்

காத்தான்குடி: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ஒலிபரப்பப்படும் முஸ்லிம் நிகழ்ச்சி கிழக்கு மாகாணத்தில் தெளிவற்ற நிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலிலும் இருந்து ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சிகளையும், மார்க்க விடயங்களையும் கேட்க முடியாத ஓர் அசௌகரிய நிலையினை கிழக்கு மாகாண மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

இதனை கருத்திற் கொண்டு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சியினை சீர் செய்து தருமாறு கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; பொறியியலாளர் ஷிப்லி பாறூக் முஸ்லிம் சமய விவகார மற்றும் அஞ்சல் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமுக்கும், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கும் மற்றும் மக்கள் தொடர்பாடல், தகவல் அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுக்கும் கடந்த 27.04.2015 அன்று ஓர் கடிதத்தினை அனுப்பியிருந்தார்.

Shibly
பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

இந்த கடிதத்திற்கு பதிலலித்த முஸ்லிம் சமய விவகார மற்றும் அஞ்சல் அமைச்சர்;; எம்.எச்.ஏ.ஹலீம் 29.04.2015 ம் திகதி கடிதம் மூலம் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு உடனடியாக கிழக்கு மாகாணத்தில் தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சியினை தெளிவாக கேட்பதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவித்திருந்தார்;.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்; பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பொறியியலாளர் (தொழிநுட்ப உத்தியோகஸ்தருடன் தொலைபேசியினூடாக 06.05.2015 அதாவது புதன்கிழமையன்று தொடர்புகொண்டு கேட்ட போது தொழிநுட்பக் கோளாறு காரணமாக ஒலிபரப்பில் சில தடங்கல்கள் இருப்பதனால் ஒலிபரப்பு தெளிவற்றதாக காணப்படுகிறது. இதனை நாங்கள் தற்போது சீர் செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் இதனை வெகுவிரைவாக சீர்; செய்து இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் கிழக்கு மாகாண மக்கள் தெளிவாக கேட்கலாம்; எனவும் உறுதியளித்தார் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by

One response to “தேசிய சேவையில் ஒலிபரப்பாகும் முஸ்லிம் நிகழ்ச்சியினை சீர் செய்து தருமாறு கோரி பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடிதம்”

  1. Five Times Azan Broadcast in the Mahinda Regiment period. But My3 palanaye—- jeilani, dambulla and muslim services……….. .

Leave a comment