கொழும்பு: ஊழியர் சேமலாப நிதியத்தில் மூன்று இலட்ச ரூபாவுக்கு மேல் பணம் இருக்குமானால், அதில் 30 வீதத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள இயலும். இதுபற்றி தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார். அவசர நோய்களுக்குச் சிகிச்சை பெறல், வீட்டை நிர்மாணித்தல் போன்ற அவசரத் தேவைகளுக்கு மட்டுமே இந்த பணத்தொகையை பெற இயலும் என்றும் அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
ஆகக்கூடிய தொகையாக இருபது இலட்ச ரூபாவைப் பெற்றுக்கொள்ள இயலும். இதனை மீண்டும் செலுத்தத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
![EPFlogo[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/05/epflogo1.jpg?w=150&h=61)
Leave a comment