Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விளையாட்டுத்துறை விருத்திக்கு விஷேட கவனமெடுக்கப்படும் – விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ்

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: பின்தங்கிக் காணப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் விளையாட்டுத்துறையை விருத்தி செய்ய விஷேட கவனமெடுக்கப்படும் என புதிதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

  • “சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படும் என்றால் அங்கு நாங்கள் ஆஜராகியிருப்போம்” அக்கரைப்பற்றில் அமைச்சர் றிசாத்

    – அக்கரைப்பறிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா அக்கறைப்பற்று: அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு கிடைத்துவரும் வரவேற்பினைக் கண்டு ஏனைய கட்சிகள் தமது பணிகளை அதிகமாக செய்வதற்கு ஆசைப்படுவதை பார்க்க முடிகின்றது என்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த பணியினை அன்று இந்த கட்சிகள் செய்திருந்தால் அம்மபாறை மாவட்ட மக்கள் தமது எத்தனையோ பிரச்சினைகளுக்கோ தீர்வை கண்டிருப்பார்கள் என்றும் கூறினார்.

  • நிமல் சிரிபால டி சில்வா புகைவண்டியில் பதுளை பயணம்

    – எம்.ஐ.அப்துல் நஸார் கொழும்பு: மலையகப் புகையிரதப் பாதைகளில் தற்போது நிலவும் குறைபாடுகளைக் கண்டறிவதற்காக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய போக்குவரத்து அமைச்சருமான நிமல் சிரிபால டி சில்வா உடரட மெனிக்கே புகையிரதத்தில் பயணமொன்றை மேற்கொண்டார்.  நேற்றைய தினம் (12) காலை 8.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த அமைச்சர் பிற்பகல் 1.30 மணிக்கு ஹட்டன் புகையிரத நிலையத்தைச் சென்றடைந்தார். 

  • சாய்ந்தமருது, கல்முனை மக்களால் பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு மகத்தான வரவேற்பு

    – ஹாசிப் யாஸீன் கல்முனை: விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் தனது சொந்த மண்ணான கல்முனைக்கு முதல் விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கு சாய்ந்தமருது, கல்முனை மக்களால் மகத்தான வரவேற்பு இன்று (12) சனிக்கிழமை வழங்கப்பட்டது.

  • மக்காவில் 2006 ஆம் ஆண்டு விபத்துக்குப் பிறகு இடம்பெற்ற நேற்றைய சோகம் (ஓர் பார்வை)

    – MJ மக்கா: மக்காவில் கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு மீண்டும் நிகழ்ந்த நேற்றைய பெரும் விபத்தில் 107 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள், ஆண்டுதோறும் சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகருக்கு ஹஜ் பயணம் சென்று வருகிறார்கள். .

  • இலங்கையிலிருந்து பிக்குணிகள் வருவதைத் தடை செய்ய தாய்லாந்து ஆலோசனை

    பேங்கொக்: இலங்கையும் தாய்லாந்தும் பௌத்த நாடுகளாக இருந்த போதிலும் இலங்கையில் தேரவாத பௌத்தமும், தாய்லாந்தில் மகாயான பௌத்தமும் பின்பற்றப்படுகின்றது. மகாயான பௌத்தத்தில் பெண்கள் பிக்குணிகளாக துறவறம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் போன்று வெள்ளை ஆடையில் பெண் பிக்குணிகள் காட்சியளிப்பதுடன், அவர்களுக்கு சமூகத்தில் மத்தியில் அங்கீகாரம் வழங்கப்படுவதும் இல்லை.

  • அமைச்சர் ரிசாத் இன்று ஒலுவில் விஜயம்

    ஒலுவில்: அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் துறை முகத்தினை அண்டிய கடற்பகுதி கடலரிப்புக்குள்ளாகிவருவதனால் அப்பிரதேச மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கடலரிப்பு பிரதேசத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் .இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமையினை பார்வையிட்டதுடன்,பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினார்.

  • முகநூல் ‘விளையாட்டு’: 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து மிரட்டிய இளைஞன்

    ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நண்பராக பழகி 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து பணம் பறித்துள்ளார். மலக்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வரும் அப்துல் மஜீத் (21), கடந்த 1½ வருடங்களாக பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் போலி பக்கங்களை தொடங்கினார்.

  • சீனாவிற்காக மத்தல விமான நிலையம் திறக்கப்படுகிறது..?

    கொழும்பு: நெற் களஞ்சியமாக மாற்றப்பட்ட மத்தல விமான நிலையம் திறக்கப்படும் அறிகுறி தென்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்தல விமான நிலையத்தின் ஒரு பகுதி நெற்களஞ்சியமாக மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த விமான நிலையத்தினை மீளவும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான அறிகுறி தென்படுகின்றது. இது தொடர்பாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிடுகையில்,

  • “முன்னாள் ஜனாதிபதியே பதவி ஒன்றுமில்லாமல் இருக்கும்போது, அமைச்சர்களாக இருந்தவர்கள் இராஜாங்க அமைச்சர்களானால் என்ன தவறு?” மைத்திரியின் நெத்தியடி

    கொழும்பு: தற்போது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த கருத்தொருமைவாத தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் அமைச்சர் பதவி வகித்த சிலர் இம்முறை தேசிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் அமைச்சர்களாக பதவி வகித்த சிலர் இம்முறை இராஜாங்க அமைச்சர்களாகவும் பதவியேற்றுள்ளனர்.

  • மக்கா விபத்தில் குறைந்தது 107 பேர் பலி; விசாரணையை துவங்கியது சவூதி அரசு

    மக்கா: மக்கா ஹரத்தில் நேற்று இடம்பெற்ற கிரேன் சரிவு விபத்தில் குறைந்தது 107 பேர் பலியாகியாகியுள்ளதாக சவூதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.இந்த விபத்தில் 230க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த விசாரணைகளை சவூதி அரேபிய அரசு துவக்கியுள்ளது.

  • எமது சமூகத்திற்கு கிடைக்க வேண்டியவற்றை நாம் பெற்றுக்கொடுக்க ஒரு போதும் பின்தள்ளப் போவதில்லை

    வாழைச்சேனை: எமது சமூகத்திற்கு கிடைக்க வேண்டியவற்றை நாம் பெற்றுக்கொடுக்க ஒரு போதும் பின்தள்ளப் போவதில்லையென்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இதனை பெற்றுக் கொடுக்க தடையாக எதுவந்தாலும் அந்த தடையினை தகர்த்து எமது போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல எந்த தியாகத்தையும் செய்ய தயாராகவுள்ளதாகவும் கூறினார்.

←Previous Page
1 … 326 327 328 329 330 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar