மக்கா: மக்காவில் கடந்த 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு மீண்டும் நிகழ்ந்த நேற்றைய பெரும் விபத்தில் 107 பேர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள், ஆண்டுதோறும் சவூதி அரேபியாவில் உள்ள புனித மக்கா நகருக்கு ஹஜ் பயணம் சென்று வருகிறார்கள். .
ஒரே நேரத்தில் சுமார் இருபது இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் குறித்த இடங்களில் ஒன்று சேர்வதால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதது. இருந்தும் யாத்திரிகளின் பாதுகாப்புக்காகவே பல பில்லியன் றியால்களை செலவு செய்து ஹாஜிகளை பாதுகாப்பாக தங்களது நாடுகளுக்கு திருப்பி அனுப்பும்வரைக்கும், சவுதி அரசாங்கம் ஹாஜிகள் விடயத்தில் அதிக கவனத்துடன் நடந்து கொள்கின்றது.
இருந்தும், எதிரிகளின் சதிகள் மற்றும் அல்லாஹ்வின் ஏற்பாட்டால் ஹஜ் காலத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை எமது வாசகர்களுக்கு இங்கு எடுத்துக் காட்டப்படுகிறது.
1975 டிசம்பர், மினாவில் சமையல் வாயுவால் ஏற்பட்ட தீ பரவலால் 200 ஹாஜிகள் பலியாகினர்.
1987 ஜூலை, ஹரத்தில் இடம்பெற்ற பாரிய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை ஈரானின் சியா பிரிவினர் மேற்கொண்டிருந்தனர்.
1990 ஜூலை: மக்கா-மினா சுரங்கத்தில் சிக்கி 1426 பேர் பலியாகினர். இவர்களுள் அதிகமானோர் மலேசியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
மே 1994, மினாவில் கல்லெறியும் நெரிசலில் சிக்குண்டு 270 யாத்திரிகர்கள் பலியாகினர்.
ஏப்ரல் 1997, மினா கூடாரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 343 பேர் பலியாகினர். 1500க்கும் அதிகமானோர் காயப்பட்டனர். இவ்விபத்து நண்பகலுக்கு முன்னர் ஏற்பட்டிருந்தது.
ஏப்ரல் 1998 ,மினாவில் கல்லெறியும் இடத்தில்ஏற்பட்ட விபத்தில் 180 பேர் பலியாகினர்
மார்ச் 2001, மினா கல்லெறியும் நெரிசலில் 35 பேர் பலியாகினர்.
பெப்ரவரி 2003, மினா கல்லெறியும் விபத்தில் 14 யாத்திரிகர்கள் உயிரிழப்பு
ஜனவரி 2006: மினா ஜம்ராத் பாலத்தில் ஏற்பட்ட பாரிய விபத்தில் 346 ஹாஜிகள் உயிரிழந்தனர். மேலும் 289 பேர் படுகாயங்களுக்கு உட்பட்டனர்.
யா அல்லாஹ் யார் யாரெல்லாம் இத்தகைய சம்பவங்களில் மரணித்தார்களோ அன்னார்களுக்கு நீ உன்னுடைய கிருபையை அளிப்பாயாக!MJ
Published by


Leave a comment