Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கையை இந்திய மாநிலமாக மாற்ற முயல்வதாக குற்றச்சாட்டு

    கொழும்பு: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் சிபா (Comprehensive Economic Partnership Agreement (CEPA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் விரிவான பொருளாதார கூட்டுறவுக்கான ஒப்பந்தம் ஏற்பட்டால் அதனால் இலங்கை மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய அழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

  • இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015 இன்று

    கொழும்பு: இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015 இன்று வைபவரீதியாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

  • “வண்ணமும் வடிவும்” என்ற தலைப்பில் கட்புலக்கலைகளின் கண்காட்சி

    ரி. லிரோஸ்காந்த் மட்டக்களப்பு: கல்லடி கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் ஓவியங்கள் சிற்பங்கள் கைவினை மற்றும் புத்தாக்க “வண்ணமும் வடிவும்” என்ற தலைப்பில் கட்புலக்கலைகளின் கண்காட்சி இம்மாதம் 16, 17, 18ம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெற உள்ளது.

  • இணக்க அரசியலில் மைத்திரி – டக்ளஸ் பிணக்கு என்ன?

    கொழும்பு: தேசிய அரசாங்கத்தில் நியமனம் பெற்று உள்ள இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குகின்ற தோரணையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூடகமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் புத்திமதி கூறி உள்ளார்.

  • காத்தான்குடியில் முச்சக்கர வண்டிகளுக்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சமூக மட்டத்தில் சிறுவர்களுக்கு ஏற்படும் விபத்துக்ளை தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை அபிவிருத்திக்கான ஒன்றினைவு எனும் தொனிப்பொருளில் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துக்கான ஐரோப்பிய ஒன்றிய உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு வீதி விபத்து பற்றி விழிப்புனர்வு ஏற்படுத்தும் வசனங்கள் அடங்கிய ஸ்டிகர்கள் ஒட்டும்

  • 8வது பாராளுமன்றம் நெடுங்காலம் நீடிக்காது!

    ஏ. அப்துல் ஹமீட் கொழும்பு: பலத்த இழுபறிகளுக்கும், பேரம் பேசுதல்களுக்குமிடையில் தற்பொழுது நிறைவடைந்திருக்கும் முழு, அரை அமைச்சு நியமனங்களுக்குப் பின்னர் ,அமைச்சுப் பதவிகளைப் பெற்றவர்கள் முழு மனதுடனும், அரை அமைச்சைப் பெற்றவர்கள் விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத நிலையிலும் பாராளுமன்றத்தில் தற்பொழுது காலை ஊன்றியிருக்கின்றனர்.

  • எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருகிறது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

    கொழும்பு: நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக இரா. சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

  • விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸூக்கு கல்முனையில் நாளை வரவேற்பு!

    ஹாசிப் யாஸீன் கல்முனை: இலங்கையின் முதல் முஸ்லிம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் பிரதி அமைச்சர் பதவியேற்று முதற்தடவையாக தனது கல்முனை மண்ணுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

  • வேலைக்குச் சென்றுவரும் நேரமும் வேலை நேரமே

    மெட்ரிட்: நிரந்தரமான அலுவலகம் இல்லாமல் பணியாற்றும் பணியாளர்களைப் பொறுத்தவரை, வேலைக்குச் சென்று, வீடு திரும்புவதற்கான நேரத்தையும் வேலை நேரத்தின் பகுதியாகக் கருத வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.இதற்கு முன்பாக, இந்த நேரம் வேலை நேரமாக கருதப்படவில்லை.

  • ஒலுவில் கடல் அரிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் அமைச்சர் றிசாத் தெரவிப்பு

    கொழும்பு: ஒலுவில் துறைமுக அபிவிருத்தியினை தொடர்ந்து அப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கொண்டுவந்துள்ளதுடன், இதனால் பாதிப்புக்குள்ளான மீனவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

  • SLTJயின் தஃவா செயற்பாடுகள் காலத்திற்கு பொருத்தமானவையா?

    ஏ.எல். முகம்மட் நியாஸ் கடந்த பல மாதங்களாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்னும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமாக மாற்றுமத மக்கள் மத்தியில் நிலவி வருகின்ற விமர்சனங்கள், அறியாமையின் காரணமாக ஏற்பட்டுள்ள தவறான எண்ணங்கள் தொடர்பில் அம்மக்களுக்கு தெளிவை வழங்குகின்ற ஓர் கேள்விபதில் நிகழ்ச்சியாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இது நடைபெற்றுவருவதை நாம் அறிவோம்.

  • மக்கள் ஆணை வழங்கப்படாத சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது: சந்திரிகா அதிருப்தி!

    கொழும்பு: மக்கள் ஆணை வழங்கப்படாத சிலருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது கவலையளிப்பதோடு திருப்தியில்லை எனவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்திற்குள் இந்த பதவிகள் வழங்கப்பட்டிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சந்திரிகா குமாரதுங்க தனது உத்தியோகபூர்வ முகநூலில் தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 328 329 330 331 332 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar