இலங்கையிலிருந்து பிக்குணிகள் வருவதைத் தடை செய்ய தாய்லாந்து ஆலோசனை

monksபேங்கொக்: இலங்கையும் தாய்லாந்தும் பௌத்த நாடுகளாக இருந்த போதிலும் இலங்கையில் தேரவாத பௌத்தமும், தாய்லாந்தில் மகாயான பௌத்தமும் பின்பற்றப்படுகின்றது. மகாயான பௌத்தத்தில் பெண்கள் பிக்குணிகளாக துறவறம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் போன்று வெள்ளை ஆடையில் பெண் பிக்குணிகள் காட்சியளிப்பதுடன், அவர்களுக்கு சமூகத்தில் மத்தியில் அங்கீகாரம் வழங்கப்படுவதும் இல்லை.

இந்நிலையில் இலங்கை பிக்குணிகளின் வருகை காரணமாக தாய்லாந்து நாட்டில் வாழும் பௌத்தர்கள் மத்தியிலும் பெண்களின் துறவற ஆர்வம் அதிகரித்து வருகின்றது. அத்துடன் இலங்கையில் போன்று தங்களுக்கும் அரச மற்றும் சமூக அங்கீகாரம் கோரி தாய்லாந்து பிக்குணிகளும் போராடத் தொடங்கி விட்டனர்.

இது அந்நாட்டின் சமூக கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இலங்கையிலிருந்து பிக்குணிகள் வருவதைத் தடை செய்ய தாய்லாந்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment