Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சட்ட நடவடிக்கை

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும் ,வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை அமுல்படுத்தும் நோக்கிலும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுவுகளிலும் கடந்த 11 வெள்ளிக்கிழமை வீதிப் போக்குவரத்து சட்ட வீதிகளை மீறியவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • அடுத்த ஆண்டு தொடக்கம் ஹஜ் யாத்திரிகர்களுக்கான கோட்டா குறைக்கப்படமாட்டாது – சவூதி அரேபிய ஹஜ் அமைச்சர்

    எம்.ஐ.அப்துல் நஸார் மக்கா: மக்கா பள்ளிவாயலின் உட்புற விஸ்தரிப்பு காரணமாக இம்முறை ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அவ்வாறு குறைக்கப்பட்ட எண்ணிக்கையிலான யாத்திரிகர்களைக் காண்பது இதுவே கடைசித் தடவையாக இருக்கும். ‘அடுத்த வருட ஹஜ் பருவகாலம் தொடக்கம் ஐந்து மில்லியனாகவும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் 30 மில்லியனாகவும் அதிகரிக்கப்படும்’ என ஹஜ் அமைச்சர் பந்தர் ஹாஜியாரை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

  • பிரதி அமைச்சர் கடமைகளை பொறுப்பேற்பு

    ஹாசீப் யாஸீன் கொழும்பு: விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று தனது உத்தியோகபூர்வ அமைச்சுக் கடமைகளை விளையாட்டுத்துறை அமைச்சில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான சட்டமுதுமானி ரவூப் ஹக்கீம், விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர்

  • அரபா தினம் செப் 23

    AF-90 றியாத்: சுவுதியில் அரபா தினம் 23ம் திகதி புதன்கிழமையும், ஹஜ் பெருநாள் தினம் 24ம் திகதி வியாழக்கிழமையும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக சவுதி அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையில் இன்று திங்கட்கிழமை மாலை துல்ஹஜ் மாதத்திற்கான பிறை பாரக்கப்பட இருக்கிறது. இதன்படி இலங்கையில் செப்டம்பர் 25ம் திகதி வெள்ளிக்கிழமை ஹஜ்பெருநாள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ‘பல்கலைக்கழக மாணவர்களின் தலைமைத்துவ பயிற்சி நிறுத்தப்படும்’

    கொழும்பு: இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவப் பயிற்சிகள் நிறுத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக கல்விக்கு பொறுப்பான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்ற மாணவர்களுக்குக் கட்டாயப் பயிற்சியாக இதனை முன்னைய அரசாங்கம் வழங்கி வந்தது.

  • புனித ஹரம் ஷரீபில் காயமுற்றவர்களை மன்னர் சேமம் விசாரித்தார்

    மெளலவி.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) மக்கா: மக்கா புனித ஹரம் ஷரீபில் கடந்த வெள்ளிக்கிழமை (11-9-2015) அன்று மாலை கடுமையான காற்று, மழை காரணமாக கட்டட வேலைகளில் பயன்படுத்தப்பட்ட மின்தூக்கி (Crane) சரிந்து விழுந்ததில் 107 ஹாஜிகள் ஷஹீதானார்கள். அத்துடன் 280 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகினர்.

  • துல்ஹஜ் மாத தலைப்பிறை பார்த்தல்

    மெளலவி.மஸ்ஊத் அஹ்ம்த் (ஹாஷிமி) கொழும்பு: ஹிஜ்ரி 1436 இற்கான் துல்ஹஜ் மாத தலைப்பிறையினை இலங்கையில் இன்று 14-09-2015 திங்கள் மாலை பார்க்கும்படி அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா கேட்டுக்கொள்கிறது. நாட்டில் எப்பாகத்திலேனும் பிறை தென்பட்டால் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்.

  • ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் காங்கிரசுடன் நடந்துகொண்டதனைப் போன்று முஸ்லிம் காங்கிரஸ் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் நடந்துகொள்ளுமா?

    அகமட் இர்ஷாட் மட்டக்களப்பு: எமது நாட்டின் அரசியல் வரலாற்றினை எடுத்துக் கொண்டால் பல கட்சி அரசியல் சூழலையே அவதானித்து வருக்கின்றோம். பல அரசியல் கட்சிகள் அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள காரணத்தினால் ஆட்சியமைப்பு விடயத்தில் தனிக்கட்சி ஆட்சி என்பதற்கு மேலாக கூட்டணி ஆட்சிக்கான சந்தர்ப்பங்களே அதிகமாக காணப்பட்டு வருக்கின்றது.

  • கம்பஹாவில் காணாமல் போன நான்கரை வயதுக் குழந்தை சடலமாக மீட்பு

    கம்பஹா: கம்பஹா, கொட்டதெனிய பிரதேசத்தில் நேற்றுக் காலை காலை காணாமல் போயிருந்த குழந்தை இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.கொட்டதெனிய பிரதேசத்தில் பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நான்கரை வயதுக் குழந்தையொன்று காணாமல் போயிருப்பதாக நேற்று வெளிவந்த தகவல் இலங்கை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

  • சிரியாவின் அகதிகள் நெருக்கடி குறித்து சவுதியில் அவசரக் கூட்டம்

    ஜித்தா: சிரியாவின் அகதிகள் நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக இஸ்லாமிய கூட்டுறவுக்கான அமைப்பு (ஓஐசி) சவுதி அரேபிய நகரான ஜித்தாவில் அவசரக் கூட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளது. ஜோர்தான், துருக்கி மற்றும் லெபனான் ஆகிய உறுப்புநாடுகள் சிரியாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ள சுமார் 40 லட்சம் மக்களை பராமரிக்கின்றன.

  • விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் நாளை அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கின்றார்

    – ஹாசிப் யாஸீன் கொழும்பு: இலங்கையின் முதல் முஸ்லிம் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவியேற்றுள்ள திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகாரங்களுக்கான பணிப்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

  • மக்கா கிரேன் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுதாபம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மக்காவின் ஹரம் ஷரீபின் தவாப் செய்யும் பகுதியில் கட்டுமானப்பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கிரேன் முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 107 பேர் பலியாயினர். மேலும் 200 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக புனர்வாழ்வு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 325 326 327 328 329 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar