கல்முனை: விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவியேற்ற பின்னர் தனது சொந்த மண்ணான கல்முனைக்கு முதல் விஜயம் செய்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸூக்கு சாய்ந்தமருது, கல்முனை மக்களால் மகத்தான வரவேற்பு இன்று (12) சனிக்கிழமை வழங்கப்பட்டது.
மாளிகைக்காடு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இவ்வரப்வேற்பு ஊர்வலம் சாய்ந்தமருது, கல்முனைக்குடி ஊடாக கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலுடன் நிறைவு பெற்றது.
இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள், வர்த்த சமூகத்தினரால் பட்டாசு கொளுத்தி, மாலை அணிவித்து பிரதி அமைச்சரினை இன்முகத்துடன் வரவேற்றனர்.
இதன்போது சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல், கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல், கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் ஆகியவற்றின் நிர்வாகத்தினரால் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டதுடன் அங்கு இடம்பெற்ற துஆப் பிரார்த்தனை நிகழ்விலும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார்.
Published by



Leave a comment