வாழைச்சேனை: எமது சமூகத்திற்கு கிடைக்க வேண்டியவற்றை நாம் பெற்றுக்கொடுக்க ஒரு போதும் பின்தள்ளப் போவதில்லையென்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இதனை பெற்றுக் கொடுக்க தடையாக எதுவந்தாலும் அந்த தடையினை தகர்த்து எமது போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல எந்த தியாகத்தையும் செய்ய தயாராகவுள்ளதாகவும் கூறினார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணியின் பட்டியிலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தெரிவாகி கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்ட எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினை வரவேற்கும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் வாழைச்சேனை முதல் கோறளைப்பற்று வரை இடம் பெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம்.நவவி,இஷாக் ஹாஜியார்,அப்துல்லா மஹருப் உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் ஒட்டமாவடி பிரதேசம் விழாக்போலம் பூண்டிருந்தது.
அதனையடுத்து ஒட்டமாவடி பலநோக்கு சங்க கூட்டுறவு மைதானத்தில் இடம் பெற்ற பிரதான கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த பாராளுமன்ற பிரதி நிதித்துவங்கள் வெறும் அலகுப் பார்க்கும் அணிகலன்களாக வைப்பதினால் மக்களுக்கு எந்த பலனும் கடைக்கப் போவதில்லை.இதனை பெறுமதியுள்ளதாக ஆக்க வேண்டும் என்றும் என்றால் அது மக்களின் கைகளுக்கு வேண்டும்.இந்த பணியினை எமது கட்சி செய்துள்ளது.கட்சிகளை நாங்கள் வெறும் பூசிப்பதில் எந்த பலனும் இல்லை,இந்த கட்சிகளை நம்பி வாக்களிக்கும் மக்கள் எதனை விரும்புகின்றார்களோ,அது அவர்களுக்கு கிடைக்கவில்லையென்றால் இந்த கட்சியினால் மக்கள் எந்தவிதமான பிரயோநசனத்தையும் அடையப் போவிதில்லை.
கடந்த தேர்தலில் சகோதரர் அமீர் அலி தோற்கடிக்கப்பட வேண்டும்,அதே போல் முன்னாள் அமைச்சர் ஹிஸ்புள்ளா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று செயற்பட்டார்கள்.அல்லாஹ்வின் உதவியால் அமீர் அலி மற்றும் ஹிஸ்புள்ளா ஆகியோர் மிகவும் சிற்நத பணியாற்றக் கூடிய பிரதி அமைச்சுக்களை பெற்றுள்ளனர்.ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட சகோதரர் அலிசாஹிர் மௌலான பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே இன்று இருக்கின்றார் இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல் பலம் என்பது மக்களின் அன்றாட தேவைகளுக்கு பின்னணியில் இருந்து செயற்படும் பெரும் பலமாகும்.அதனை நாம் சரியாக பயன்படுத்த தவறுவோமெனில் அரசியல்வாதிகளை விடவும் மக்களே பாதிக்கப்படுவர்.இந்த நிலையினை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகத்தான் எமது கட்சி சமூகத்திற்கு எதிராக செயற்படும் சக்திகளை கவனமாக கையாளுகின்றது.
எமது கட்சி பெற்றது நான்கு ஆசனங்கள்,ஆனால் நாங்கள் எதிர்பார்த்த ஆசனத்தை அடைய புத்தளம்,குருநாகல்,ஆகி்ய இரு மாவட்டங்களிலும் எமது கட்சி வேண்பாளர்கள் சொற்ப வாக்குவித்தியாசத்தில் அந்த பாராளுமன்ற சந்தர்ப்பத்தை இழக்க நேரிட்டது.அதே போல் அம்பாறை மாவட்டத்தில் 33 ஆயிரம் வாக்குகளை எமது கட்சி தனித்து போட்டியிட்டு பெற்றது.ஆனால் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசனங்களை பெற்றால் ஒரு ஆசனம் உறுதியானது என்று இருந்த போதும்,அது கிடைக்காமல் போனது தொடர்பில் நாம் சட்ட நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.அதே வேளை எமது கட்சிக்கும்,வேட்பாளர்களுக்கும் வாக்களித்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த பாராளுமன்றம் என்பது மகிவும் முக்கியத்துவம் வாய்ந்தது,புதிய திருத்தங்கள்,எல்லை வரைவுகள்,என்பன கொண்டுவரப்படவுள்ளது,குறிப்பாக 20 வது திருத்தம்,உள்ளுராட்சி தேர்தல் முறை என்பன தொடர்பில் இந்த ஆட்சியில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளது.எது எவ்வாறாக இருந்துாலும் எடுக்கப்படும் தீர்வில் எமது சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றால் அதனை முதலில் எதிர்பவர்கள் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும்,நாங்களும் என்பதை இங்கு உறுதியாக தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன்.
தேர்தல் முடிந்த பிறகும் இங்கு வந்து உங்களை பிழையாக வழி நடத்த சிலர் வருவார்கள்,அவர்கள் கடந்த காலங்களில் உங்களுககு பெற்றுத்தந்தது என்“ன என்பதை,அமைச்சர் அமீர் அலி செய்திருக்கின்ற பணிகளையும் ஒப்பிட்டுபாருங்கள்,எவர் உங்களுக்கு பணி செய்திருக்கின்றார்களோ,அவர்களின் பணியினை அங்கீகரித்தால் இந்த இன்னும் எத்தனையோ அபிவிருத்திகளை அவர்கள் கொண்டு வந்து தருவார்கள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இதன் போது தெரிவித்தார்.



Leave a comment