Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 5000 பேரை கட்டம் கட்டமாக அழைத்துவர முடிவு

    ஜித்தா: சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 5 ஆயிரம் இலங்கை பணியாளர்களையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு திருப்பி அழைத்துவரவுள்ளதாகவும் அதுவரை அவர்கள் முன்பு தொழில்புரிந்த இடங்களில் தொடர்ந்து பணிபுரிய சவூதி அரசாங் கத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது.

  • மக்களின் எழுச்சி! அரசாங்கம் ஆட்டம்!! பொது பல சேனா அடக்கம்?

    -AF47 கொழும்பு: இலங்கையின் சிறுபான்மை இனத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு வந்த இரு விதமான வேட்டைகள் மக்கள் எழுச்சியின் மூலமாக முறியடிக்கப்பட்டிருப்பதானது, இந்நாட்டின் ஓர் சமூகத்தின் ஒற்றுமைக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாக கருதமுடியும்.

  • ஈரான், பாகிஸ்தான், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளில் நிலநடுக்கம்!

    – AF47 டில்லி: இன்று காலை ஈரானிலும், டில்லியிலும் 8.0 அளவு நில நடுக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து கட்டடங்கள் ஆட்டங்கண்டதாகவும், சில சிதைவுகளுக்கு உட்பட்டதாகவும் தெரியவருகிறது.

  • தங்கம் விலை 3 நாட்களில் வீழ்ச்சி! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!! மக்கள் மகிழ்ச்சி!!!

    சென்னை: தங்கத்தின் விலை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. மூன்றே நாட்கள் சவரனுக்கு ரூ 2008 குறைந்து, ரூ 20075-க்கு விற்பனையாகிறது. சர்வதேச நிலவரப்படி வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என்று கூறப்பட்டுள்ளதால், முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்களோ மகிழ்ச்சியுடன் நகைக்கடைகளில் குவிய ஆரம்பித்துள்ளனர்.

  • காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளர்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு புதிய உதவிப் பிரதேச செயலாளராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அஹமட் அப்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தியாகம் நிறைந்த ஆசிரியர்களின் பணியினால் கல்முனைப் பிரதேசம் கல்வியில் வளர்ச்சி கண்டுள்ளது – ஏ.சீ. யஹியாகான்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: தியாகம் நிறைந்த ஆசிரியர்களின் பணியினால் கல்முனைப் பிரதேசம் கல்வியில் வளர்ச்சி கண்டுள்ளது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்கத்துவத்திற்கான தேசிய பணிப்பாளரும், அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.சீ. யஹியாகான் தெரிவித்தார்.

  • காத்தான்குடியில் இஸ்லாமிய மாநாடு

    – இஸ்லாமிக் சென்றர் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்திருக்கும் இஸ்லாமிய மாநாடு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 19-04-2013 வெள்ளிக்கிழமை ஜாமியுத் தௌஹீத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற இருக்கின்றது.  இம்மாநாடு சம்பந்தமான துண்டுப்பிரசுரம் இங்கு இணைக்கப்படுகிறது.

  • ஜனாஸா அறிவித்தல்

    கொழும்பு: கொழும்பு முன்னாள் பிரதி மேயர் ஆஸாத் சாலியின் தாயார் இன்று காலமானார்கள் ( இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன் ) அன்னார்    அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் சகோதரி ஆவார்.

  • அல்லாஹ்வின் உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் இலங்கையிலேயே இடம்பெற்றுள்ளது!

    – பழுளுல்லாஹ் பர்ஹான் லண்டன்: அல்லாஹ்வின் உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது- பிரித்தானிய புலம்பெயர் ஸ்ரீ லங்கா முஸ்லிம்களின் கையெழுத்துப் பெறும் செயற்பாடு குறித்து பிரித்தானியாவில் இயங்கும் S.L.M.D.I. (ஸ்ரீ லங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர) அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • வரிப்பத்தாஞ்சேனையில் தையல் இயந்திரங்கள் கையளிப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் அம்பாறை: அம்பாறை மாவட்டத்தில் இறக்காமம் வரிப்பத்தாஞ்சேனை 03ம் குறிச்சி மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ. நைசர் தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

  • தேர்தல் திணைக்களத்தின் கண்காணிப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் இன்று

    கொழும்பு: தேர்தல் திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்திற்கான தேர்தல் இன்று (16) காலை கிரிக்கெட் தலைமையகத்தில் நடைபெறுகிறது. மேற்படி தேர்தலை முன்னின்று நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கமைய தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

  • விரைவில் ‘பாதை’ இல்லாப் பயணத்தில் மண்முனை!

    – டீன் பைரூஸ்  மட்டக்களப்பு: மண்முனை என்றால் அனைவரது மனதிலும் உதிப்பது ஆற்றைக்கடக்க உதவும் ‘பாதை’ என்பதை மறக்க முடியாது!  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மண்முனைப் பாலத்தின் வேலைத்திட்டம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

←Previous Page
1 … 1,092 1,093 1,094 1,095 1,096 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar