தேர்தல் திணைக்களத்தின் கண்காணிப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தல் இன்று

SRI LANKA CRICKET LOGO[1] கொழும்பு: தேர்தல் திணைக்களத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்திற்கான தேர்தல் இன்று (16) காலை கிரிக்கெட் தலைமையகத்தில் நடைபெறுகிறது. மேற்படி தேர்தலை முன்னின்று நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கமைய தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

கடந்த மாதம் நடைபெற இருந்த இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் ஏப்ரல் 16 வரை ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற தேர்தல்களின் போது பயன்படுத்தப்படுகின்ற வாக்குப் பெட்டிகள், அலுவலகக் குறியீடுகள் என்பன இந்தத் தேர்தலின் போது பயன்படுத்தப்படமாட்டாதென்பதோடு தேர்தல்கள் திணைக்களம் வசமுள்ள விலை மனுக்கோரல்கள் இடப்படுகின்ற பெட்டிகளும் உபயோகத்திலில்லாத உத்தியோகபூர்வ குறியீடுகளும் இதன் போது பயன்படுத்தப்படும் எனவும் தேர்தல் திணைக்களம் கூறியது.

வேட்பு மனுக்களைக் கோரல், ஏற்றுக்கொள்ளல், நிராகரித்தல், தேருநர் முகவர்களின் பெயர்ப்பட்டியலைத் தயாரித்தல், வாக்குச் சீட்டுக்களை அச்சிடல் போன்ற எந்தவொரு பணியிலும் தேர்தல்கள் திணைக்களம் பங்களிப்புச் செலுத்தவில்லையென்பதோடு, வாக்குச் சீட்டின் மாதிரி தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவது மாத்திரமே தேர்தல்கள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வாக்குச் சீட்டுக்களின் பாதுகாப்பு மற்றும் விநியோகிக்கப்படுகின்ற வாக்குச் சீட்டுக்களில் உத்தியோகபூர்வ குறியீடுகளை இடல்.

ஒவ்வொரு தேருநர் முகவரி னாலும் தத்தம் விருப்புக்கள் வெளிப் படுத்தப்பட்டுள்ளமை எவருக்கென்பதை தெரிந்துகொள்ள முடியாதவாறு அதாவது இரகசியத்தன்மை பாதுகாக்கப் படக்கூடியவாறு வாக்குகளை எண்ணல் மற்றும் பெறுபேறுகளை அட்டவணை இடல் தொடர்பாக தேர்தல்கள் திணைக்களம் உதவி வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

-தினகரன்

Published by

Leave a comment