விரைவில் ‘பாதை’ இல்லாப் பயணத்தில் மண்முனை!

manmunai (2)– டீன் பைரூஸ்

 மட்டக்களப்பு: மண்முனை என்றால் அனைவரது மனதிலும் உதிப்பது ஆற்றைக்கடக்க உதவும் ‘பாதை’ என்பதை மறக்க முடியாது!  கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மண்முனைப் பாலத்தின் வேலைத்திட்டம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டுவரும் தற்போதைய பாதை உடைந்த நிலையில் காணப்படுவதுடன்,  பயணிகளையும் வாகணங்களையும் மற்றும் கால்நடைகளையும் ஏற்றிச் செல்வதில் பாரிய சிக்கல்களையும் எதிர்நோக்கி வருகின்றது.

ஜப்பான் நாட்டின் விசேட பொறியியளார்கள் தலைமையில் மிக கட்சிதமாக இவ்வேலைத்திட்டம் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பாதை ஊடாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்துவருவது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment