மக்களின் எழுச்சி! அரசாங்கம் ஆட்டம்!! பொது பல சேனா அடக்கம்?

bothu-AF47

கொழும்பு: இலங்கையின் சிறுபான்மை இனத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டு வந்த இரு விதமான வேட்டைகள் மக்கள் எழுச்சியின் மூலமாக முறியடிக்கப்பட்டிருப்தானது, இந்நாட்டின் ஓர் சமூகத்தின் ஒற்றுமைக்குக் கிடைத்திருக்கும் வெற்றியாக கருதமுடியும்.

கடந்த வருடம் இலங்கையில் சிறுபான்மையின மக்களை வேட்டையாடி ஏவப்பட்டிருந்த ‘கிறீஸ்’ மனிதர்களை, மக்கள் அடையாளம் கண்டு, அடி, அடி என்று அடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர், அரசாங்கத்திலிருந்து மக்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

அவற்றுள்,

‘சட்டத்தை பொது மக்கள் கையாளக்கூடாது’ என தெரிவித்திருந்ததன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக மக்கள் சந்தேகித்து, போராட்டங்களையும், விழிப்புக்குழுக்களையும் ஏற்படுத்தி, இரவில் கணிவிழித்து, சமூகங்களின் ஒற்றுமையை வெளிக்காட்டி, சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டதால் ‘கிறீஸ்’ மனிதர்கள் புரளி இந்நாட்டில் முற்றாக அகற்றப்பட்டிருந்தது.

இதன்பின்னர், பொது பல சேனா அமைப்பு உருவாக்கப்பட்டு, தம்புள்ளை பள்ளிவாயல் முதல், ஹலால் அகற்றல் வரையிலும் வெளிப்படையாக செயற்பட்டு வந்தனர்.

காவியுடை தரித்தவர்கள், மகான்களாக போற்றப்படவேண்டியவர்கள், துவேசத்தை கையிலெடுத்தும், சட்டத்தை கையிலெடுத்தும், பொலிஸார் முன்னிலையில் கடையுடைப்பு, ஆர்ப்பாட்டம், சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக சந்தேகித்தனர். ஆதார பூர்வமான ஒலி, ஒளி வடிவங்கள் இவர்களின் நடவடிகையின் போது மாட்டிக்கொண்டதால், இவர்களுக்கு தப்பிக்க வழி கிடைக்கவில்லை.

அது மாத்திரமன்றி, இதற்கு வலுவூட்டும் முகமாக பொது பல சேனாவின் அலுவலக திறப்புக்கு அமைச்சர் கோட்டபாய ராஜபக்ஷ சென்றிருந்ததானதும், மக்களின் சந்தேகத்தை உண்மைப்படுத்தியது.

இதன் பின்னர் இலங்கை பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் எவரும் வாய்திறந்து கண்டிக்கமுடியாமல் இருந்ததையும், அவர்களால் எதுவுமே பேச முடியாது என்பதை மக்கள் உணர்ந்துகொண்டதாலும், இலங்கை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் உரிமை மீறல்களை உலகுக்கு வெளிக்காட்டவும் கடையடைப்பு, ஹர்த்தால் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் மலையகத்தின் சில முஸ்லிம் ஊர்களைத் தவிர இலங்கை முழுவதிலும் கடைகள் அடைக்கப்பட்டு, பகிரங்கமான ஹர்த்தாலை உள்ளுர் அரசியல் அழுத்தங்களுக்கும் மத்தியில் உலகுக்கு இலங்கை முஸ்லிம்கள் செயற்படுத்திக் காட்டினர்.

இதன் பின்னர், மத்திய கிழக்கு ஊடகங்களும், ஐரோப்பா ஊடகங்களும் இலங்கை முஸ்லிம்களுக்கு இலங்கையில் இருக்கும் அச்சம், உரிமை மீறல்கள்ப பற்றி எழுத ஆரம்பித்தன. ஐரோப்பாவிலும் சில ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அது மாத்திரமன்றி, மகஜர்களும், கடிதங்களும் உலக சமாதான தரப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இறுதியாக அமெரிக்கா, பிரித்தானியா ஊடகங்கள் கூட இலங்கை முஸ்லிம்களின் சம கால விடயங்களை ஆராயந்து, முஸ்லிம்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதை வெளிக்காட்டி இருந்தன.

இதற்கிடையில்,  தமிழ்நாட்டின் அரசியலால் இந்தியாவின் இலங்கை மீதான அரசியல் நட்பில் ஆட்டம் கண்டிருக்கின்றன. இலங்கை புலம் பெயர் தமிழர்கள் ஒரு பக்கம் அவர்களின் சமூகத்துக்காக் குரல்கொடுத்துவரும் நிலையில், ஐரோப்பாவில் வாழும் இலங்கை  முஸ்லிம்களும் தனது சமூகத்துக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கின்றர்.

அரசாங்கம் அன்று தடுக்க வேண்டியதை தடுக்காது, ஓர் வெள்ளோட்டத்தில் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த பொதுபல சேனாவின் செயற்பாடுகளை இன்று கட்டுப்படுத்தி இருப்தாக தெரியவருகிறது.

அதற்காக நாங்களெல்லாம் ஆராவாரம் செய்து மகிழ்ச்சியாக இருக்கும் ஓர் தருணமாக எண்ணிவிடக்கூடாது. தற்பொழுது இவ்வமைப்பின் முக்கிய உறுப்பினரகள் சிலர்; வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்ட்டிருக்கின்றனர்.

அது மாத்திரமன்றி, புத்தாண்டை கொண்டாடும் இக்காலத்தில் சமாதானத்தை பேணிக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்றே கருத வேண்டும்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாய் திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வந்தது. எனினும் மக்கள் சக்தியை அரசாங்கமோ, பொதுபல சேனாவோ கனவிலும் நினைத்திருக்கிவில்லை! அது மாத்திரமன்றி இப்பிரச்சினை உலகக்கு வெளிக்காட்டப்பட்டு, இவ்வளவு அழுத்தங்களை விளைவிக்கும் என்றும் அரசாங்கம் நினைக்கவில்லை!

முஸ்லிம் அமைச்சர்களை வைத்தே கதையை முடித்துவிடலாம் என்ற நப்பாசையில் ஆரம்பித்த முஸ்லிம்கள் மீதான இந்த உரிமை மீறல்கள் இன்று செல்லாக் காசாக முடக்கப்பட்டிருக்கின்றது.

எனினும் இன்னுமொரு உருவத்தில் வேறுவிதமான ஓர் அமைப்பில் இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினத்தினர் மீதான உரிமைகளைப் பறித்தெடுக்க இவர்கள் முயற்சிக்கலாம்.

2014ல் பாரிய அரசியல் மாற்றங்கள் இலங்கையில் ஏற்படாலம் என்ற ஊகங்கள் அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றன.
நாம் ஏற்கனவே கூறியிருந்தது போல், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் மீள் அரசியல் பிரவேசம், கொழும்பு அரசியலில் மாற்றத்தை கொண்டு வரலாம்.

எதிர்க்கட்சி தலைவர் உட்பட அதன் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, ஆளும் கட்சி முக்கிய உறுப்பினர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரதிநிதிகள் என்று இரகசிய பேச்சுவார்த்தைகளும் ஆலோசனைகளும் இடம்பெற்று வருகின்றன.

இதனை அறிந்த அரசாங்கம் இந்நாட்டில் தற்பொழுது அரசாங்கத்திற்கு இருக்கும் அவப்பெயர்களைக் களைந்தெறிந்து, மீண்டும் ஸ்திரமான ஓர் அரசியல் முன்மாதிரியை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே தனது வீட்டு நாயாக இதுவரையும் இருந்துவந்த பொது பல சேனாவை ஓய்வெடுக்க வைத்திருக்கின்றது என்பதை முஸ்லிம்கள் அறிந்துகொள்ளவேண்டும்

Published by

Leave a comment