ரோம்: சிரியாவில் அமைதி நிலவ வேண்டும் என்று கோரும் ஒரு கவன்யீர்ப்பு நிகழ்ச்சிக்கு போப் பிரான்ஸிஸ் அழைப்பு விடுத்துள்ளார். ரோமில் தனது வாராந்திர உரையினை நிகழ்த்திய அவர், எதிர்வரும் சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ள ஒரு கவனயீர்ப்பு நிகழ்வில் கத்தோலிக்கர்கள் மற்றும் கத்தோலிக்கர் அல்லாதோர் பெருமளவில் திரள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் தலைமையில் அந்த கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
உபவாசம், பிரார்த்தனைகள்
இந்த வாரக் கடைசியில் ஒரு நாள் முழுவதையும் சிரியாவுக்காக, உபவாசத்திலும், பிரார்த்தனையிலும் கழிக்குமாறும் போப் பிரான்ஸிஸ் வேண்டியுள்ளார்.
சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான இராணுவத் தாக்குதல்கள் நடைபெறக் கூடிய அச்சுறுத்தல்கள் கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிராக வத்திகன் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
சிரியா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது தொடர்பாக தமது கண்டனங்களை போப் அவர்கள் வெளியிட்டுள்ள அதேவேளை, அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
– BBC
Leave a comment