மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட தீடீர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…..

imagesவிசேட நிருபர்-

இன்று பிற்பகல் பெய்த திடீர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் குறிப்பாக காத்தான்குடி, ஏறாவுர்,கிரான்,படுவாங்கரை போன்ற பல பகுதிகளின் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.

இடி,மின்னல், காற்றுடன் கூடிய திடீர்  மழையினால் சில இடங்களில் சிறு சிறு பாதிப்புக்கள் குறுகிய நேரத்திற்குள் இடம் பெற்றிருப்பதை அறிய முடிகின்றது.

இதே நேரம் இடி மின்னலுடன் மழை பெய்ததினால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன.

கடந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில மின்னல் தாக்கி சிலர் இறந்தமையும் குறிப்படத்தக்க விடயமாகும்.

இவ்வாறான காலநிலை மாற்றம் திடீரென அடிக்கடி நிகழக் கூடும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளதுடன் மீன்பிடிக்க செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வேண்டப்படுகின்றனர்.DSC00027

Published by

Leave a comment