PPL 2013: இரண்டாவது லீக் சுற்றின் இறுதி போட்டி வெள்ளிக்கிழமை

– றிபாத். எல்.எம்.

pplகாத்தான்குடி: பூநொச்சிமுனை விளையாட்டு கழகம், சியாத் பவுண்டேஷன் அனுசரணையுடன் நடாத்தும் ‘PPL 2013 Champions Cup T20′ 12வது லீக் சுற்றின் இறுதி போட்டி 2013.09.06 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.30 மணிக்கு காத்தான்குடி அணிக்கும், கல்முனை ஏஜ்ஸ்டீல் அணிக்கும் பூநொச்சிமுனை அல்இக்ரா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.

இச்சுற்றுப்போட்டியில் பிரிவு Aயில் அரை இறுதிக்கு முதலாவதாக பூநொச்சிமுனை அணியினரும், இரண்டாவதாக சாய்ந்தமருது பிளான்ஹௌஸ் அணியினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

நாளை நடைபெற இருக்கும் பிரிவு B போட்டியின்  பின்னர் 2 அணிகள் தெரிவு செய்யப்படும். இச்சுற்றுப்போட்டியின் அரை இறுதி போட்டி இன்ஸாஅல்லாஹ் 2013.09.07 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு முதலாவது அரை இறுதிப்போட்டியும், அன்று பி.ப. 2 மணிக்கு இரண்டாவது அரை இறுதிப் போட்டியும் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறும்.

மேலதிக விபரங்களுக்கு,

எம்.பர்ஸாத் (0772659528)

(செயலாளர்)

ppl

Published by

Leave a comment