பல கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது காத்தான்குடி செய்ன் மௌலானா பள்ளிவாயல்

-டீன் பைரூஸ்-

DSC00130காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதி (பஸ் தரிப்படத்திற்கு முன்பாக) உள்ள அஷ் செய்யிது ஸெய்ன் மௌலானா பள்ளிவாயல் புதிய கட்டுமாணப் பணிக்காக வேண்டி  உடைப்பதற்கான பணிகள்  சென்ற வாரதிதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீண்டகால  வரலாற்றினைக் கொண்ட பள்ளிவாயல்கள் பல காத்தான்குடியில் உள்ளன அவற்றினில் காத்தான்குடி  அஷ் செய்யிது ஸெய்ன் மௌலானா பள்ளிவாயலும் ஒன்றாகும்.

சுமார் 50 வருட கால வரலாற்றினைக் கொண்ட இப்பள்ளிவாயலானது கொழும்பு சம்மாங் கோட்டைப் பள்ளிவாயலினைப் போன்று அதிகமான வெளியுர் மக்கள் தொழுகைக்காக வேண்டி வந்து போகக் கூடிய ஒரு முக்கிய பள்ளியாக அன்றுமுதல் இன்றுவரை இப்பள்ளிவாயல் விளங்குகின்றது.

கடந்த காலங்களில் பல நிர்வாகிகளினால் மிகவும் சிறப்புடன் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பள்ளிவாயலானது தற்போது புதிய நிர்வாக சபையின் சிறந்த அர்ப்பணிப்புடன் நிர்வகிக்கப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

காத்தான்குடி மற்றும் வெளியுர் மக்களின் வருகை அதிகரித்து வருவதனால் இப்பள்ளிவாயலினை விஸ்தரிப்பது என்பது காலத்தின் அவசியத் தேவை எனக்கருதிய நிர்வாக சபை  பல கோடி ருபாய் செலவில் நிலத்திற்கு அடியிலான வாகன தரிப்புடன் கடைத் தொகுதிகள் எதுவுமின்றி நான்கு மாடிகளைக் கொண்ட ஒரு அழகிய பள்ளிவாயலினை கட்டுவது எனத் தீர்மாணித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இப்பள்ளிவாயலுக்காக செலவிடப் படவுள்ள பணத்தின்  அரைவாசி தொகையினை காத்தான்குடியினைச் சேர்ந்த  கொடையாளி  ஒருவரினால் வழங்கப்படவுள்ளதாகவும்  அறிய முடிகின்றது.

தற்போது உடைக்கப்பட்டு வரும் பள்ளிவாயலின் படங்கள்……………DSC00118DSC00119DSC00121DSC00125DSC00129

      வெளியில் கொண்டு வரப்படாமல் கவுளில் கிடங்கும் பெரிய மீன்கள்.

DSC00122  DSC00123DSC00126

 

Published by

Leave a comment