மின் சூரியனால் சுட்டுப் பொசுக்கும் லண்டனின் 37 மாடி கட்டிடம்!

lk– OiT

லண்டன்: லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று மக்களின் பெரும் துயரமாக மாறியுள்ளது. காரணம், இந்தக் கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜன்னல் கண்ணாடிகள் சூரிய வெளிச்சத்தை படு பிரகாசமாக பிரதிபலித்து மக்களுக்கு பெரும் இடையூறு செய்வதால் என்று கூறுகிறார்கள். குறித்த கட்டிடத்தால் அதிக சூரிய ஒளி தாக்குகிறது என மக்கள் முறைப்பாடு செய்திருக்கின்றனர்.

இதையடுத்து எங்கு தவறு நடந்தது என்று கட்டுமான குழுவினர் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த 37 மாடிக் கட்டடத்திற்கு ‘வோக்கி டோக்கி’ என்று பெயர் வைத்துள்ளனர். காரணம், ‘வோக்கி டோக்கி’ போல இது லேசாக வளைந்து காணப்படுவதால் தான்.

இந்த கட்டடத்திற்குப் பின்னால் உள்ள பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுவோர் இந்த கட்டடத்தின் கண்ணாடிகளால் தாங்கள் பல பாதிப்புகளை சந்திப்பதாக புகார் கூறுகிறார்கள்.

ஒரு ஜகுவார் காரின் கண்ணாடி, பேனல்கள் உள்ளிட்டவை இந்த கட்டட வெளிச்சப் பிரதிபலிப்பு பட்டு உருகிப் போய் விட்டதாம். நேரடியாக சூரிய ஒளியை இக்கட்டடத்தின் கண்ணாடி ஜன்னல்கள் கீழே பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.

london

அதிக அளவில் இந்த கண்ணாடிகள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் கிட்டத்தட்ட மினி சூரியனைப் போல உஷ்ணம் ஏற்பட்டு இந்த பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு நிறுவனத்தின் பெயிண்டிங்கையே இது உருக்கி விட்டதாம். மேலும் கார்பெட்களும் எரிந்து போய் விட்டனவாம்.

இந்த கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் எந்த அளவுக்கு சூடான ஒளியைப் பிரதிபலிக்கின்றன என்பதை விளக்குவதற்காக ஒரு டிவி குழுவினர் அந்தக் கட்டடத்திற்கு எதிரே அந்த வெளிச்சத்தில் வைத்து முட்டையை ஓம்லட் போட்டு செயல் விளக்கம் காட்டியதை பலரும் கூடி வேடிக்கை பார்த்தனர்.

இந்த வெளிச்சப் பிரதிபலிப்பு பிரச்சினை காரணமாக இந்தக் கட்டடத்திற்கு எதிரே உள்ள மூன்று கார் பார்க்கிங்குகளை தற்போது மூடி விட்டனர். பல கார்களுக்குப் பாதிப்பு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டடத்திற்கு ‘வோக்கி டோக்கி’ என்ற பெயர் பொருத்தமல்ல. மாறாக சூரிய வலை என்றுதான் பெயரிட வேண்டும் என்று சிலர் கோபத்துடன் கூறுகின்றனர்.

nk

இந்த கட்டட வெளிச்சப் பிரதிபலிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வாங்கித் தரப்பட்டுள்ளதாக லண்டன் மாநகராட்சி செய்தித்தொடர்பாளர் கூறுகிறார். மேலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கட்டட கட்டுமானக் குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த சூரிய வெளிச்சம் பட்டு சாலையில் நிறுத்தப்பட்டுள்ள பல கார்களில் மேற்கூரை, முன்பகுதி உள்ளிட்டவை உருகிப் போய் இருந்தன.  இதனால் தொடர்ந்து பலர் இந்தக் கட்டடம் குறித்து புகார்களைக் குவித்து வருகின்றனர்.

lk

Published by

Leave a comment