மும்பை: மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த இருவர் மோசமாக நடந்து கொண்டுள்ளனர். மும்பை மலாத் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் (ஃபஷன் ஸ்டைலிஸ்ட்) ஓஷிவாராவில் உள்ள கடைத் தொகுதிக்கு கடந்த சனிக்கிழமை மாலை 5.30 ஆட்டோவில் தனியாக சென்றுள்ளார்.
அந்த ஆட்டோ மும்பை லிங்க் ரோட்டில் சென்றபோது அந்த வழியாக ஒரு பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்கள் ஆட்டோவுக்கு அருகிலேயே சென்றதுடன் அந்த பெண்ணை கிண்டல் செய்து, அசிங்கமாக பேசியுள்ளனர்.
அவரைப் பார்த்து விசில் அடித்ததோடு, கண்ணடித்துள்ளனர். அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறிய ஆட்டோ டிரைவரை அவர்கள் திட்டி, சண்டைக்கு அழைத்துள்ளனர். அந்த இருவரும் ஆட்டோவின் கம்பியைப் பிடித்து கொண்டே பைக்கில் சென்றுள்ளனர். இதில் பயந்துபோன அப்பெண் சாதுர்யமாக தனது செல்போனில் அவர்களை போட்டோ எடுத்துக் கொண்டார்.
அவர்களின் ஆட்டம் அத்துமீறவே ஆட்டோ டிரைவர் வண்டியை நிறுத்த முயன்றதும் அவர்கள் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து பொலீசில் புகார் கொடுத்தால் ஏதாவது பின்விளைவுகள் வருமோ என்று அவர் பயந்து கொண்டு புகார் கொடுக்கவில்லை. அவர்களின் புகைப்படத்தை பொலிவூட்டில் துணை இயக்குனராக இருக்கும் அப்பெண்ணின் நண்பர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்தப் பெண்ணைத் துரத்திய காமுகர்கள் இருவரும் இவர்களே!
இந்தியாவில் பாலியல் வதைகள் அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a comment