ஆணாக இருந்து தன்னை பெண்ணாக மாற்றிக்கொண்ட பிரித்தானிய இராணுவப் பெண்ணின் இஸ்லாமிய நுழைவும், அனுபவமும்…

lucy (2)– MJ

லண்டன்: இதுவரை காலமும் துப்பாக்கியுடனும், போர் எண்ணங்களுடனும், குடிபோதையிலும் இருந்து வந்த பிரித்தானிய இராணுவத்தின் ‘றோயல் குலஸ்சயர், பார்க்சயர் மற்றும் வில்சயர் மாநிலங்களுக்கான ரி.ஏ. ரெஜிமெண்ட்டின் பெண் இராணுவ வீரர் லூசி வெலண்டன் Lucy Vellender (28) புனித இஸ்லாத்தை அண்மையில் ஏற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து, சுவிண்டன் நகரில் வசித்து வந்த லூசி வெலண்டனர் பற்றி அவரது தாய் கிலெண்டா கூறுகையில்,

‘லூசி, 14 வயதாக இருக்கும் போது தனது உடல் அமைப்பில் மாற்றத்தைக்கண்டு, தான் பெண்ணாக மாற இருப்பதாக என்னிடம் தெரிவித்தார். தனது உடலில் வேறு மாற்றங்களை உணர்கிறேன்’ என்பதாக என்னிடம் கூறினார்.

தனது உடலை சத்திர சிகிச்சை மூலமாக பெண்ணாக மாற்றிக்கொண்டு, 2006ல் பிரித்தானிய ரோயல் ரெஜிமெண்டில் இணைத்துக் கொண்டார்.

அதன் பின்னர் தான் ஓர் பெண்தானா  என்பதை சக இராணுவ பெண்வீரர்கள் என்னை அந்தரங்கமாக பரிசோதித்து மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர்.

இராணுவ தளபாடங்களைக் கையாளக்கூடிய திறன், வியூகம், பெண்ணியல் பலாத்காரங்களும், அதன் அவதானங்களும்  மற்றும், இராணு சிரேஷ்ட பயிற்சி போன்ற கற்கைகளை தான் இராணுவ முகாமில் கறுவந்ததாக கூறினார்.

‘பெண்ணாக மாறிய பின்னரும் எனக்கு ஆண் நன்பர்களும், தோழிகளும் இருந்தனர். மது, மாது என நாங்கள் இரவு முழுக்க கிளப்பில் மயங்கிக் கிடப்போம். ‘அல்கஹோல்’ எனது அபிமான பானமாக இருக்கும்’.

‘நான் கல்வி கற்கம் போது லண்டன், ஒக்ஸ்போர்ட் நகரங்களுக்கு போய் வருவது வழக்கம். அங்கு அழகிய பள்ளிவாயல்கள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மாணவர்கள் பதறியடித்துக்கொண்டு பள்ளிவாயலுக்கு ஓடிச் செல்வதையும் பார்த்திருக்கிறேன். நான் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் இருந்தே பள்ளிவாயலுக்கு ஹிஜாப் அணிந்து சென்று வந்திருக்கிறேன்’.

lucy (4)

‘ஆங்கில தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் Peace channel  சனலை நான் பார்த்து வருவது வழக்கம். மக்கள் கேட்கும் கேள்விகள் அதற்கான பதில்கள், குர்ஆன் இதுபோன்ற இஸ்லாமிய விடயங்களை இந்த சனல் மூலமாக பார்த்து வந்தேன்.
அதுதவிர, இஸ்லாமிய இணையத்தளங்கள் ஊடாகவும், இஸ்லாத்தை தேடிப் படித்து வந்தேன். இஸ்லாம் ஓர் அமைதியான மார்க்கம் என்பதை  நான் தெளிவாக இன்று உணர்ந்துள்ளேன்’.

‘இணையத்தள மூலமாக இங்கிலாந்தில் கல்வி கற்கும் மொரக்கோ நாட்டு மாணவரான  22 வயதுடைய முராத் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. தனது தாய் தந்தையோருடன் தான் லண்டனில் வாழ்வதாகவும் என்னிடம் முராத்கூறினார். இதன்பின்னர் எங்களுக்கிடையில் இஸ்லாமிய புரிந்துணர்வுகள் தளைக்க ஆரம்பித்தன.

lucy (2)

‘என்னை ஒக்ஸ்போர்ட்டிற்கு வருமாறு அழைத்தார். நான் ஒக்ஸ்போர்ட் நகர பள்ளிவாயலுக்கு அருகில் காத்திருந்தேன். என்னை அடையாளம் கண்ட முஆத், பள்ளிவாயலுக்குள் சென்று வருவதாகக் கூறினார். என்னையும் பெண்கள் தொழும் அறைக்கு சென்று அங்கு அமருமாறு கூறினார்’.

‘பின்னர் நாங்கள் பள்ளிக்கு வெளியில் சந்தித்து எங்களது விடயங்களைப் பேசினோம். நான் ஹிஜாப் போன்ற ஓர் ஆடையை தலையில் அணிந்து சென்றேன். எனினும் முகத்தை மறைக்கவில்லை’.

‘அதன் பின்னர், எனது கடந்த கால பாலியல் உடல் மாற்றம் பற்றி முஆத்திடம் தெரிவித்தேன்.அதற்கு அவர் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை’.

lucy

‘ஏனெனில் நான் உண்மையில் ஓர் பெண்ணே! சில வருடங்களுக்கு முன்னர் (பெண்ணாக மாறியதன் பின்னர்) எனக்கு இத்தாலி நாட்டவரான ஓர் இளைஞன் போய் பிரண்டாக (Boy Friend) இருந்தார். அவருடன் நான் தொடர்பு வைத்திருந்தேன். அவர் எனது உடம்பில் எவ்வித குறையும் எல்லை என்பதையும், நான் ஓர் பெண் என்பதையும் சொல்லி இருந்தார்’.

‘வழமையாக பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இயற்கை மாற்றங்கள்  தொடரந்தும் எனது உடலில் ஏற்பட்டு வருகின்றன’. எனவும் லூசி தெரிவித்தார்.

‘நான் இஸ்லாத்தைத் தழுவியதும், என்னால் கட்டுப்படுத்த, விட முடியாதிருந்த மதுபானத்தை முற்றாக தவிர்க்க முடிந்தது. ஐந்து வேளையும் தவறாமல் தொழுது வருகிறேன். அல்குர்அனை படித்து தினமும் ஓதி வருகிறேன்’.

‘எங்கள் ஊர் பள்ளிவாயலுக்கும் சென்று வருகிறேன். எனது உடல் மாற்றத்தை அறிந்த பள்ளிவாயலின் மூத்த உறுப்பினர்கள் (வயதானவர்கள்) என்னை பள்ளிவாயலுக்குள் பெண்கள் பகுதிக்குள் அனுமதிக்கவில்லை. ஏனெனில் நான் இன்னும் ஆணாகவே இருக்கிறேனோ என அவர்ககளுக்கு சந்தேகம் இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் அவர்களின் சந்தேகம் விரைவில் போய்விடும்’ என்றும் லூசி தெரிவித்தார்.

‘லண்டனில் உள்ள முஆத்தின் வீட்டில் அவரது குடும்பத்தின் அனுமதியுடன் எனது திருமணம் இடம்பெற்றது. அவர்கள் அனைவர்களுக்கும் எனது திருமணத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டதை இன்றுவரை உணர்கிறேன்’.

‘தற்பொழுது தலையையும், தேவை ஏற்படின் முகத்தையும் மறைத்து ஓர் முஸ்லிம் மனைவியாக வெளியில் சென்று வருகிறேன். இது எனக்கு மென்மேலும் மகிழ்ச்சியளிக்கின்றது’  என்றும் லூசி முராத் தெரிவித்தார்.

lucy (3)
சுவிண்டன் புரோட் வீதி (Broad Street) ஜூம்ஆ பள்ளிவாயல்

குறிப்பாக மறைந்த இளவரசி டயானாவின் இஸ்லாமிய நுழைவுக்கான முயற்சியின் பின்னர் இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். எனினும் உலக தீவிரவாதத்தை முஸ்லிம்களின் பெயரை தாங்கி, சில குழுக்கள் இங்கிலாந்தில் தாக்குதல் நடாத்தப்பட்டதையிட்டு, இஸ்லாத்தைவிட்டும் அங்குள்ள மக்கள் தூரமாக்கப்பட்டனர்.

எனினும், இவ்வாறான தேடல்கள், நட்புக்கள், வெளிநாட்டுப் பயணங்கள் காரணமாக இன்னும் அங்கு மக்கள் இஸ்லாத்தைப் படிப்பதிலும், இஸ்லாத்தைத் தழுவி வருவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தொடர்ந்து இஸ்லாத்தின்பால் ஆங்கில மக்கள் ஈர்க்கப்பட்டு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு வருவதையிட்டு அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். பத்திரிகைகள் முன்பக்கத்தில் தலைப்பிட்டாலும், இஸ்லாத்தின் மீது அங்குள்ள மக்களின் ஆர்வத்தையும், மக்களின் தேடலையும் இப்பத்திரிகைகள்  தெட்டத்தெளிவாக சுட்டிக்காட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதோர் விடயமாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s