Category: Your Kattankudy
-
அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக போலிப் பிரசாரம்! மக்கள் குழப்பமடைய வேண்டாம் என அனந்தி அறிவிப்பு
யாழ்ப்பாணம்: தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரன் அரசாங்க கட்சிக்கு மாறிவிட்டதாக தலைப்புச் செய்தியுடன் போலி உதயன் பத்திரிகை இன்று காலை இனந்தெரியாத நபர்களினால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான செய்திகளை நம்பவேண்டாம் எனவும், மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனவும் அனந்தி தெரிவித்துள்ளார்.
-
லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்! சந்தேகமான இருவர் கைது
லண்டன்: நேற்று லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, இடையில் கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
மெத்தைப்பள்ளிவாசல் தலைவர் பதவியிலிருந்து மர்சூக் அகமட்லெப்பை நீக்கம்!
– வாரஉரைகல் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அவரைப் பதவி நீக்க வேண்டாம் என அலியார் மௌலவி பகீரதப் பிரயத்தனம்!! ‘என்னை ஒரு உலமாவாக நீங்கள் கணக்கெடுக்கவில்லையே?’ என்ற மனப் பொருமலுடன் அவர் மெத்தைப்பள்ளியிலிருந்து வெளியேற்றம்!!!
-
அனந்தி வீட்டின் மீது தாக்குதல்; தேர்தல் கண்காணிப்பாளருக்கும் அடி
யாழ்: இலங்கையின் வடக்கே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளரான அனந்தி சசிதரனுடைய வீட்டில் வியாழனன்று நள்ளிரவு ஆயுதமேந்திய குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ நேரம் அனந்தி வீட்டில் இருக்கவில்லை. இதனால் அவர் ஆபத்திலிருந்து தப்பியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
-
3 மாகாணசபைகளுக்கும் இன்று தேர்தல்: 10 மாவட்டங்களிலிருந்து 142 பேர் தெரிவு
கொழும்பு: வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. மூன்று மாகாண சபைகளிலுமிருந்து 142 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கென 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
-
எருக்கலம்பிட்டி அசம்பாவிதம்: காயப்பட்ட இருவரும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதி
– அபூ அஸ்ஜத் எருக்கலம்பிட்டி: நேற்று இரவு மன்னார் எருக்கலம்பிட்டியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் அரபாத்தின் வீட்டில் இருந்த வேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களினால் தாக்கப்பட்ட நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் வாக்கு மூலங்களை பெற்றுக் கொள்ளும் பணியினை மன்னார் பொலீஸார் ஆரம்பித்துள்ளதாக பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஒருவர் கூறியுள்ளார்.
-
எருக்கலம்பிட்டி தேர்தல் அசம்பாவிதம்: பிந்திக் கிடைத்த செய்தி
– அபூ அஸ்ஜத் எருக்கலம்பிட்டி: மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் இன்று இரவு 8.00 மணியளவில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அரபாத்தின் வீட்டிற்குள் புகுந்த கும்பலொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக மன்னார் பொலீஸார் தெரிவித்தனர்.
-
காத்தான்குடியில் இன்று 15 திருமணங்களும் 4 ஜனாஸாக்களும்..
– எமது உள்ளுர் செய்தியாளர் காத்தான்குடி: நேற்று வியாழக்கிழமை போயா தினத்துடன் ஆரம்பமான நீண்ட விடுமுறை தினத்தை முன்னிட்டு வெள்ளி, ஞாயிறு தினங்களை கருத்திற்கொண்டு திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தவகையில் இன்று வெள்ளிக்கிழமை 15 திருமணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வந்துள்ள சகோதரர்கள், மற்றும் உறவினர்களின் மகிழ்ச்சி ஆராவாரங்களுடன் சிறப்பாக திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன.
-
தமிழ்த் தேசிய அணியே வடக்குத் தேர்தலில் வெல்லும்: கருத்துக் கணிப்பு
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கில் முக்கியமாக தமிழ் மக்கள் கால் நூற்றாண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக தமக்கான நிர்வாகம் ஒன்றை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளனர். அந்த சந்தர்ப்பம் அவர்களுக்கு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை கிடைத்துள்ளது.
-
வடமாகாணசபை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்
யாழ்: இலங்கையின் வடக்கே 25 வருடங்களின் பின்னர் முதற் தடவையாக நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள். மொத்தமாக 36 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவார்கள்.
-
மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் அரபாத் வீட்டுக்குள் நுழைந்த முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கடும் தாக்குதல்!
– அபூ அஸ்ஜத் மன்னார்: மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் உள்ள மன்னார் பிரதேச சபையின் உறுப்பினர் அரபாத் வீட்டுக்குள் நுழைந்த முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக மன்னார் பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
-
இடையூறு விளைவித்தால் வாக்குகள் இரத்து : தேர்தல் ஆணையாளர்
கொழும்பு: வாக்குச்சாவடிகளில் எவராவது இடையூறு விளைவித்தால் வாக்குகள் இரத்துச் செய்யப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.