எருக்கலம்பிட்டி அசம்பாவிதம்: காயப்பட்ட இருவரும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதி

IMG_20130920_233208[1]–  அபூ அஸ்ஜத்

எருக்கலம்பிட்டி: நேற்று இரவு மன்னார் எருக்கலம்பிட்டியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் அரபாத்தின் வீட்டில் இருந்த வேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களினால் தாக்கப்பட்ட நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் வாக்கு மூலங்களை பெற்றுக் கொள்ளும் பணியினை மன்னார் பொலீஸார் ஆரம்பித்துள்ளதாக பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மறைந்திருக்கும் இடம் குறித்து தகவல்கள் பெறப்பட்டுவருவதாகவும், அவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.

வடமாகாண சபை தேர்தலில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினை வெற்றி பெறச் செய்யவென மன்னார் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அரபாத், மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.தௌபீக் ஆகியோர் அண்மையில் மன்னாருக்கு ஜனாதிபதி வருகைத்தந்த போது தமது ஆதரவை வழங்குவதற்கான உறுதியினை அமைச்சர் றிசாத் ஊடாக தெரிவித்திருந்த நிலையில் பிரதேச சபை உறுப்பினர் அரபாத்தினை இலக்கு வைத்து அவரது இல்லத்துக்குள் புகுந்த கும்பல் தாக்கியுள்ளது.

அதே வேளை காயத்துக்குள்ளான இருவரும் மன்னார் வைத்தியசாலையின்  4 வது வார்ட்டில் 25 மற்றும் 26 ஆம் இலக்க கட்டிலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அதே வேளை எருக்கலம்பிட்டி பிரதேசத்தில் வைத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மன்னார் தேர்தல் கண்கானிப்பு நிலையத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், இது குறித்து கொழும்பிலுள்ள தேர்தல் செயலகத்தின் 24 மணித்தியால தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கடமை நேர அலுவலகர் தெரிவித்தார்.

IMG_20130920_233224[1]

mannar

Published by

Leave a comment