Category: Your Kattankudy
-
இஸ்லாமிய தஃவா சென்றரின் ஏற்பாட்டில் பெண்களுக்கான இஜ்திமா
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிய தஃவா சென்றரினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான இஜ்திமா நிகழ்வு இன்று சனிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் மௌலவி அஸ்பர் ஹஸன்(பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.
-
மாத்தளையில் காதி நீதிமன்றம் திறப்பு
– FM. பர்ஹான் மாத்தளை: மாத்தளையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள காதி நீதிமன்றம், நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் அண்மையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. முன்னர் வீடுகளிலும், பாடசாலைக் கட்டடங்களிலும் இயங்கி வந்த காதி நீதிமன்றங்கள் அமைச்சர் ஹக்கீமின் முயற்சியின் பயனாக, பெரும்பாலும் சுவீகரிக்கப்பட்ட அரச காணிகளில் அவற்றிற்கான
-
தேர்தலின் போது இப்படியும் ஓர் சம்பவம்….
மன்னார்: எருக்கலம்பிட்டியிலும் ஏனைய சில கிராமங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சிலரால் தமது கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை கவர்வதற்காக அரசியல்வாதி ஒருவரின் ஏற்பாட்டில் உணவுப் பொருட்களை குறிப்பிட்ட சில கடைகளிலிருந்து
-
லண்டன் கிளப்பம் சந்தி ரயில் நிலையத்தில் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி!
– MJ லண்டன்: லண்டன் கிளப்பம் சந்தி ரயில் நிலையத்தில் சற்று முன்னர் இளைஞர் ஒருவர் ஓடிச் சென்ற ரயில் முன்னிலையில் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக அறிய முடிகிறது. குறித்த நபர் ஓர் இளைஞராக இருக்கக்கூடும் என நம்பப்படுவதுடன், உடல் அவசரமாக மருத்துவமைன்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கின்றது.
-
மாகாணசபைத் தேர்தல்: மொத்த வாக்களிப்பு விபரம்
கொழும்பு: வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொருட்டு இன்று நடைபெற்ற தேர்தலின் மாவட்ட ரீதியான மொத்த வாக்களிப்பு வீதம் வருமாறு: மத்திய மாகாணம்
-
நிறைவடைந்தது மாகாணசபைத் தேர்தல்
கொழும்பு: வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கு நடைபெற்றத் தேர்தல்கள், ஓரிரு சம்பவங்களைத் தவிர பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. வட மாகாண சபைக்கான தேர்தலில் வாக்களிப்பு முதலில் மந்தமாக இருந்தாலும் பின்னர் விறுவிறுப்படைந்ததாக தெரியவருகிறது.
-
வடமாகாண தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருடைய வீடு வாக்களிப்பு தினத்திற்று முந்திய நாளான வெள்ளியன்று அதிகாலை தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து, பதட்டம் நிலவியபோதிலும், இன்று சனிக்கிழமை காலை 7 மணிமுதல் அமைதியான முறையில் விறுவிறுப்பான வாக்களிப்பு நடைபெற்று வருகிறது.
-
அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் வந்த கும்பலினால் PMGG ஆதரவாளர் மீது தாக்குதல்: PMGG கண்டனம்
– PMGG ஊடகப்பிரிவு மன்னார்: அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் வந்த கும்பலினால் தமது ஆதரவாளர் ஒருவர் இன்று காலை தாக்கப்பட்ட சம்பவத்தினை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) வன்மையாகக் கண்டிக்கின்றது என PMGG விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கண்டியில் பதற்றம்: முஸ்லிம் பகுதிகளில் வாக்களிப்பில் ஆர்வம்
கண்டி: வத்துகாமம் பெருந்தோட்டப் பகுதியான கலாபொக்கை அபிராமி வித்தியாலயத்தில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பகுதிகளில் வாக்களிப்பு மிக வேகமாக இடம்பெறுகிறது. குறிப்பாக அக்குறணை, உடுநுவர பிரதேசங்களில் 50 சதவீதத்தையும் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.