எருக்கலம்பிட்டி தேர்தல் அசம்பாவிதம்: பிந்திக் கிடைத்த செய்தி

attack_bang_CI[1]– அபூ அஸ்ஜத்

எருக்கலம்பிட்டி: மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் இன்று இரவு 8.00 மணியளவில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பிரதேச சபை உறுப்பினர் அரபாத்தின் வீட்டிற்குள் புகுந்த கும்பலொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக மன்னார் பொலீஸார் தெரிவித்தனர்.

தாக்குதலினால் சக்கீன் மற்றும் முஜீப் ஆகியோர் காயங்களுக்குள்ளான நிலையில் சற்று முன்னார் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளை தாக்குதலை நடத்திய பள்ளி பரிபாலன சபை தலைவர் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் தலைமறைவாகியிருப்பதாகவும், அவர்களை தேடி மன்னார் பொலீஸார் வலைவிரித்துள்ளனர்.

அதே வேளை இந்த தாக்குதல் தொடர்பில் தேர்தல்கள் அவதானிப்பு மையத்திற்கு முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிததுள்ளது.

Published by

Leave a comment