– எமது உள்ளுர் செய்தியாளர்
காத்தான்குடி: நேற்று வியாழக்கிழமை போயா தினத்துடன் ஆரம்பமான நீண்ட விடுமுறை தினத்தை முன்னிட்டு வெள்ளி, ஞாயிறு தினங்களை கருத்திற்கொண்டு திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தவகையில் இன்று வெள்ளிக்கிழமை 15 திருமணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வெளியூர்களில் இருந்து வந்துள்ள சகோதரர்கள், மற்றும் உறவினர்களின் மகிழ்ச்சி ஆராவாரங்களுடன் சிறப்பாக திருமணங்கள் இடம்பெற்று வருகின்றன.
காத்தான்குடி கடற்கரையிலும் அதிகளவான மக்கள் பிந்திய மாலை நேரத்தில் வந்து சேர்ந்திருந்ததையும் காண முடிந்தது.
இதேவேளை, 4 ஜனாஸாக்கள் இன்று காத்தான்குடியில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment