Category: Your Kattankudy
-
காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சந்தரு தத்சரா பலஹேவா அகில இலங்கை ரீதியில் முதலிடம்!
கொழும்பு: தற்போது வெளியாகியுள்ள 2013 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின்படி 198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன் சந்தரு தத்சரா பலஹேவா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
-
காத்தான்குடி மில்லத் மகளிர் மகா வித். மாணவி 190 புள்ளிகள்!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின்படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடிக் கல்விக் கோட்டத்தில் முதலாவது இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 04ஆவது இடத்தையும் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மாணவி அப்துல் மஜீத் பாத்திமா மம்தூஹா பெற்றுள்ளார்.
-
உலகில் 80 கோடி பேர் பசியால் வாடுகின்றனர்
ஜெனிவா: உலகில் எட்டில் ஒருவர் பட்டினியால் வாடுவதாக ஐநா அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலவும் சூழல் குறித்து ஆராய்ந்த இந்த அறிக்கை 80 கோடி மக்கள் மோசமான பசியால் வாடுவதாகத் தெரிவித்துள்ளது. சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை பேணக்கூடிய அளவுக்கு உண்ணும் வசதியில்லாதோரே இந்தப் பட்டியலில் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.
-
கிண்ணியா வலய பாடசாலைகளிலும் உலக சிறுவர் தின நிகழ்வுகள்
– ரைஸ் கிண்ணியா: உலக சிறுவர் தின நிகழ்வுகள் இன்று நாடுபூராகவுமுள்ள பாடசாலைகளில் வெகு விமர்சையாக இடம்பெற்ற நிலையில் கிண்ணியா வலய பாடசாலைகளிலும் சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வுக்கு கிண்ணியா நகரசபை நகரபிதா
-
வின்ஸிஸ் நெட் வேர்க் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
– முகமட் ரிஸ்கான் சாய்ந்தமருது: வின்ஸிஸ் நெட் வேர்க் ஒழுங்கு செய்திருந்த ‘இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்’ எனும் தொனிப் பொருளிலானான இளைஞர் யுவதிகளுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் இலகுவாக தொழில் வாய்ப்பினை அல்லது சுயதொழிலினை மேற்கொள்ளும் வகையில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் பயிற்சிக் கருத்தரங்கொன்று இடம்பெற்றது.
-
வடக்கு தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டது போல் முஸ்லிம் சமூகம் ஜனநாயக ரீதியில் ஒன்றுபட முன்வராவிட்டால் இலங்கையில் முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்-முபாறக் அப்துல் மஜீத்
– பழுளுல்லாஹ் பர்ஹான் வடக்கு தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டது போல் பள்ளிவாயல்களை உடைத்துவிட்டு புதினம் பார்த்துக்கொண்டிருக்கும் அரசுக்கும் அதற்கு முட்டுக்கொடுப்போருக்கும் எதிராக முஸ்லிம் சமூகம் ஜனநாயகரீதியல் ஒன்றுபட முன்வராவிட்டால் இந்நாட்டு முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
-
கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராம முன்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீ சுபத்திரா ராம முன்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (01.10.2013) காலை சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரத்ன தலைமையில் நடைபெற்றது.
-
சவூதி அபிவிருத்தி நிதிய தூதுக்குழு -அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு!
கொழும்பு: இலங்கைக்கு வருகை தந்துள்ள சவூதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தின் உயர்மட்ட தூதுக்குழுவினர், நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நீதியமைச்சில் சந்தித்துரையாடினர். பிரஸ்தாப நிதியத்தின் இலங்கைக்கான நடப்பு நிதியாண்டிற்கான செயல்திட்ட யோசனைகள்
-
விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்
யாழ்ப்பாணம்: வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறிக்கும் இடையில் இன்று காலை 10.00 மணிக்கு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
-
கிளிநொச்சி- கொழும்பு ரயிலில் கொள்ளை
கொழும்பு: கிளிநொச்சிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. நான்கு பயணிகளிடமிருந்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மயக்க மருந்து அளித்து, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
-
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் எனும் கோஷம் எழுப்பி பதாதைகளை ஏந்தி காத்தான்குடியில் ஊர்வலம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2013 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயம் ஏற்பாடு செய்த சிறுவர் தின ஊர்வலம் 01-10-2012 இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பாடசாலை உப அதிபர்கள்,ஆசியரிய ஆசிரியர்கள்,சிறுவர் சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
-
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் -எதிர்காலத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கை கோர்ப்போம்: சிறுவர்தின வாழ்த்துச்செய்தியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
– முகம்மட் சஜி கடந்த காலங்களிலும் தற்பொழுதைய காலங்களிலும் எதிர் காலங்களிலும் சமூகத்தை வழிநடாத்துகின்ற அல்லது சமூகத்தை கொண்டு செல்கின்ற பாரிய பொறுப்பு தற்பொழுதைய சிறுவர்கள் மீது இருக்கிறது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றனர்.