Category: Your Kattankudy
-
வெளிநாட்டிலிருந்து வந்தோரில் 40வீதமானோருக்கு எச்.ஐ.வி !
கொழும்பு: எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களில் 40 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வருகைத் தந்தவர்கள் என்று தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் தலைவர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். 33 வீதமானோர் ஆண்களும் 7 வீதமான பெண்களும் இவ்வாறு எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
-
விகாரமாதேவி பூங்கா நாளை முதல் மூடப்படும்!
கொழும்பு: விகாரமாதேவி பூங்கா நாளை அக்டோபர் முதலாம் திகதி முதல் அக்டோபர் 30ம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும். புனரமைப்பு பணிகளுக்காக பூங்கா மூடப்பட்டுள்ளதாக கொழும்பு நகரசபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு
-
நைஜீரியாவில் கல்லூரி மாணவர்கள் 50 பேர் சுட்டுக் கொலை
யோபே: நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவசாயக் கல்லூரியில் காவலர்களை கொண்டு வழங்கப்படுகின்ற பாதுகாப்பு எதுவும் இருந்திருக்கவில்லை என அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
-
வெளிநாட்டுக் கணவர் பார்க்க! கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை
ஏறாவூர்: கிருஷ்நப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் ,கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு SKYPEயில் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில் தூக்கிட்டு மரணிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கணவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளையில் நைலோன்
-
காத்தான்குடியில் திவிநெகும திட்டத்தில் 90பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திவி நெகும வேலைதிட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகமும் காத்தான்குடி பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சிகளை
-
தமிழ் தேசியம் முஸ்லிம்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் பிரித்தானியா: வட மாகாணத்தின் ஆட்சி அதிகாரங்களை வடமாகாண சபை தேர்தலின் மூலம் கைப்பற்றியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முஸ்லிம்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் அப்போதுதான் சகவாழ்வும் சகோதரத்துவமும் ஏற்படுமென பிரித்தானியாவிலுள்ள
-
துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்
– மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. சிறப்புகள்:-
-
புலமைப்பரிசில் பெறுபேறுகள் 02ஆம் திகதி வெளியாகும்
கொழும்பு: தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 02ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிட்டு வைக்கப்படும் அதேவேளை, மாணவர்களின் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
-
விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது
– அல் ஜெஸீராவுடனான நேர்காணல்: நியுயோர்க்: நவநீதம்பிள்ளை ஏற்கனவே இலங்கைக்கு எதிரான அறிக்கையை தயாரித்து முடித்த பின்னரே இலங்கை விஜயத்தை மேற்கொண்டார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் 19 தேர்தல்களை நடத்தி முடித்த எங்கள் மீது நாம் அதிக சர்வாதிகார போக்கில் சென்று கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்துவது நியாயமற்ற செயல் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்ஜெஸீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
தீவிரவாத அமைப்புகளை முற்றாக அழியுங்கள்: பாகிஸ்தானுக்கு மன்மோகன் எச்சரிக்கை!
– SHM நியூயோர்க்: பாகிஸ்தான் மண்ணிலிருந்தபடி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் அத்தனை தீவிரவாத முகாம்களையும், அமைப்புகளையும் பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும் என்று சற்றே கடுமையான குரலில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்.
-
பெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது
லண்டன்: பெண்பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைகழகம் இந்த ஆண்டுக்கான மனித நேய விருது வழங்கி கெளரவித்துள்ளது. பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா, தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதனையடுத்து தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தவர், உலகம் முழுவதும் பெண் கல்வியை வலியுறுத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
-
லண்டன் தேம்ஸ் நதியில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலாப் படகு
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தேம்ஸ் நதியில் சுற்றுலாப் படகொன்று தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் அதில் இருந்த சுமார் 30 பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். லண்டன் தீயணைப்பு படையினர் சென்று எரிந்து கொண்டிருந்த படகில் இருந்த பயணிகளை காப்பாற்றியுள்ளனர்.