காத்தான்குடி: வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றின்படி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடிக் கல்விக் கோட்டத்தில் முதலாவது இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 04ஆவது இடத்தையும் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய மாணவி அப்துல் மஜீத் பாத்திமா மம்தூஹா பெற்றுள்ளார்.
இது தொடர்பில் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி ஜெஸீமா முஸம்மில் தெரிவிக்கையில்,
190 புள்ளிகளைப் பெற்ற மில்லத் மகளிர் வித்தியாலய மாணவி அப்துல் மஜீத் பாத்திமா மம்தூஹா மாவட்ட மட்டத்தில் 04ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இது தவிர காத்தான்குடி மில்லத் மகளிர் மஹா வித்தியாலயத்தில் பாத்திமா றிஸா 173, ஆய்ஷா திக்ரா 171, நஸ்ருத்தீன் அப்துர் ரகுமான் 169 மேலும் பல மாணவிகள் சித்தி பெற்றுள்ளதாகவும் வித்தியாலய அதிபர் திருமதி ஜெஸீமா முஸம்மில் மேலும் தெரிவித்தார்.

Leave a comment