கிண்ணியா: உலக சிறுவர் தின நிகழ்வுகள் இன்று நாடுபூராகவுமுள்ள பாடசாலைகளில் வெகு விமர்சையாக இடம்பெற்ற நிலையில் கிண்ணியா வலய பாடசாலைகளிலும் சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.இந்நிகழ்வுக்கு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இதன்போது சிறுவர்கின் கலை நிகழ்ச்சி, சிறுவர் சந்தை, சிறுவர்களின் ஆக்கத்திறன் போன்ற பல விடயங்கள் சிறுவர்களின் திறமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இதன்போது நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், நகரசபை உறுப்பினர் எம்.ஏ.எம்.நிஜாம், நகரசபை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜம்சித், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிறுவர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
![20131001_095920[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/20131001_0959201.jpg?w=150&h=112)
![20131001_100600[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/20131001_1006001.jpg?w=640&h=480)
![20131001_095920[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/20131001_0959201.jpg?w=640&h=480)
![20131001_102419[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/20131001_1024191.jpg?w=640&h=480)
Leave a comment