– பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: 2013 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயம் ஏற்பாடு செய்த சிறுவர் தின ஊர்வலம் 01-10-2012 இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ.கபூர் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பாடசாலை உப அதிபர்கள்,ஆசியரிய ஆசிரியர்கள்,சிறுவர் சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் சிறுவர் தின ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுவர் சிறுமிகள் சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் எனும் கோஷம் எழுப்பி பதாதைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பமான இவ் ஊர்வளம் காத்தான்குடி மெத்தைப்பள்ளி வீதி வழியாக பிரதான வீதியை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.
![DSC00474[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dsc004741.jpg?w=702&h=527)
![DSC00483[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dsc004831.jpg?w=702&h=527)
![DSC00484[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/dsc004841.jpg?w=702&h=527)
Leave a comment