Category: Your Kattankudy
-
P67799159 என்ற தொடர் இலக்கத்தை கொண்ட 2ஆயிரம் ரூபா நாணயத்தாள் கிடைத்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவும்
சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மாலபே பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதோடு பணம் அச்சிட்ட அச்சகமும் இன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட அனைத்தும் போலி நாணயத் தாள்களும் இரண்டாயிரம் ரூபா நாணய தாள்கள் என பொலிஸ் குற்ற புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் சமூக சேவைப் பிரிவினரின் ஏற்பாட்டில மனிதநேயம் பேணும் இரத்ததான முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் ஏறாவூர்: ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் சமூக சேவைப் பிரிவினரின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை27 மாபெரும் மனித நேயம் பேணும் இரத்ததான முகாமொன்று ஏறாவூர் அல் அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
-
மட்டு வைத்தியசாலையில் சௌக்கிய மற்றும் விஞ்ஞான பீடங்களிற்கான கற்பித்தல் அலகுக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க யினால் நாட்டி வைப்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய கற்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 299 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய மற்றும் விஞ்ஞான பீடங்களிற்கான முழு வசதிகள் கொண்ட
-
பிரிட்டன் புயலில் இருவர் பலி – 130 விமானங்கள் ரத்து
இங்கிலாந்து: பிரிட்டனை தாக்கிக்கொண்டிருக்கும் புயல் காற்றில் இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கெண்ட் பகுதியில் ஒரு சிறுவனும், வட்ஃபோர்ட்டில் ஒருவரும் புயலில் மரங்கள் வீழ்ந்ததால் கொல்லப்பட்டிருக்கிறாரகள்.
-
மிஸ்வாக் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டமும் பல் வைத்திய உண்மைகளும் – தொடர் 7
ஆசிர் இஸ்லாமிய அடிப்படையில் மிஸ்வாக் செய்யும் முறை வாயில் ஏற்படக் கூடிய வாய்த் துர்வாடை மற்றும் பற்களில் மஞ்சற்காவி படிதல் போன்றவற்றை நீக்குவதற்காகவே மிஸ்வாக் இஸ்லாத்தின் ஒரு அங்கமாக செயற்படுகின்றது. இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கும் ஷரீஆவில் ஒழுங்குமுறைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
-
அமெரிக்கா ஒட்டு கேட்ட விவகாரம்: சுவிஸ் கண்டனம்
ஜெனீவா: ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைப்பேசி ரகசியங்களை அமெரிக்க ஒட்டுக் கேட்டது குறித்து சுவிஸ் ஜனாதிபதி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி அழைப்புகளை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக் கேட்ட சம்பவமானது உலகம் முழுவதும் சர்சையை கிளப்பியுள்ளது.
-
9.56 பில்லியன் டொலர் இலாப சரித்திர வெற்றியில் சாம்சங்!!
– SHM சியோல்: சாம்சங் எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இது வரை கண்டிராத அளவு 9.56 பில்லியன் டொலர் நிகர லாபத்தை நடப்பு காலாண்டில் ஈட்டியுள்ளது என கடந்த வெள்ளியன்று அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக விளங்கிய அதன் ஸ்மார்ட் போன்களின் விற்பனைக்கும் மைக்ரோ சிப்பின் அதிகப்படியான விலைக்கும் நன்றியை தெரிவித்துள்ளது.
-
பால திறப்பு விழாவுக்கு பிரதியமைச்சர் கருணாவை அழைக்காததை கண்டித்து மட்டுவில் சில இடங்களில் பெணர்கள்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட வலையிறவு பால மற்றும் ஆயித்தியமலை பால திறப்பு விழாக்களுக்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்திமுரளிதரனைஅழைக்காததைக் கண்டித்துமாவட்டத்தில் சில இடங்களில் பதாதைகள் (பெணர்) தொங்கவிடப்பட்டுள்ளன.
-
110மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டு வலையிறவு பாலம் திறந்து வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: யுத்தம் மற்றும் வன் செயலினால் உடைக்கப்பட்டு கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 110மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பிரதான பாலமான மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட வலையிறவு பால திறப்பு விழா இன்று 28திங்கட்கிழமை காலை 10.00மணியளவில் உள்ளுராட்சிமாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.அதாஉல்லாவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-
இங்கிலாந்தில் நிலவும் சூறாவளி!
– MJ லண்டன்: 1987ம் ஆண்டிற்குப் பின்ன்ர் தென் இங்கிலாந்து பிரதேசங்களில் இன்று நள்ளிரவிலிருந்து சூறாவளிக் காற்று வீசுகின்றது. மணிக்கு 90 மைல் வேகத்தில் இக்காற்று வீசுவதுடன், பலத்த மழைகளும் தொடர்ந்து பெய்து வருகின்றன. விமானம், வீதி மற்றும் ரயில் போக்குவரத்துக்கள் அநேகமான பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
-
கிண்ணியா நகரபிதாவினால் புதிய நூலகம் திறந்து வைப்பு!
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் பைசல் நகரில் இடம்பெற்ற நிகழ்வின் போது புதிய நூலத்தினை மக்கள் பாவனைக்காக நகரபிதா மக்களிடம் கையளித்தார். இந்நூலகம் கிண்ணியா நகரசபையினூடாக பராமரித்து கண்காணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
-
3பி ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி- நகர சபையின் கல்விக்குழுவின் ஏற்பாட்டில் காத்தான்குடி-3பி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரனையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு 27-10-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 3பி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உயர் பீட உறுப்பினர் எம்.ஆர்.எம்.றசா தலைமையில் இடம்பெற்றது.