110மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டு வலையிறவு பாலம் திறந்து வைப்பு

???????????????????????????????– பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: யுத்தம் மற்றும் வன் செயலினால் உடைக்கப்பட்டு கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் 110மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட படுவான்கரையையும் மட்டக்களப்பையும் இணைக்கும் பிரதான பாலமான மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட வலையிறவு பால திறப்பு விழா இன்று 28திங்கட்கிழமை காலை 10.00மணியளவில் உள்ளுராட்சிமாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.அதாஉல்லாவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.அதாஉல்லா, கிழக்குமாகாணமுதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத்,முன்னாள் முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன்,ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் றிட்டா ஐ ஒசில்லிவன்,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நெடுஞ்சாலைகள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதமபொறியியலாளர் எந்திரிஎம்.மகிந்தன்,மாகாண அமைச்சர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,அதிதிகள்,பிரதேசசெயலாளர்,பாடசாலை மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வுக்கு வவுணதீவு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்,மாவட்டஅபிவிருத்திக் குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் அழைக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மட்டக்களப்பு ஆயித்தியமலை பாலமும் நேற்று திங்கள் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.

???????????????????????????????

???????????????????????????????

valai iravu bridge

Published by

Leave a comment