3பி ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் அனுசரணையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: காத்தான்குடி- நகர சபையின் கல்விக்குழுவின் ஏற்பாட்டில்  காத்தான்குடி-3பி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரனையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் இறுதி நாள் நிகழ்வு 27-10-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்  3பி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உயர் பீட உறுப்பினர் எம்.ஆர்.எம்.றசா தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது குறித்த வழிகாட்டல் கருத்தரங்கிள் இருந்து கேட்கப்பட்ட வினா விடைப் போட்டியில் வெற்றி பெற்று குழுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவ மாணவிகளுக்கு அதிதிகளினால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இவ் இறுதி நிகழ்வில்; காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், காத்தான்குடி- நகர சபையின் கல்விக்குழுவின் தலைவரும்,நகர சபை உறுப்பினருமான பாக்கீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்ஸா, காத்தான்குடி-3பி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.எம்.ஆரிப்,சேவுத சில்ரன் நிறுவனத்தின் கல்விக்குழு ஆலோசகரும், 3பி ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உறுப்பினருமான எஸ்.எம்.சன்ஸீர் ,வரலாறு பாட ஆசிரியர் ஏ.எல்.அப்துல் அஸீஸ் மற்றும் 3பி ஸ்ரீலங்கா நிறுவன பிரதிநிதிகள், கற்பித்தல் ஆசிரியர்கள், பங்குபற்றிய மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் வழிகாட்டல் கருத்தரங்கில் சுமார் 600 மாணவ மாணவிகள் பங்குபற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வினா விடைப் போட்டியில் வெற்றி பெற்று குழுக்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 14 மாணவ மாணவிகளுக்கு பரிசில்களை வழங்குவதற்கு அனுசரணையாளர்களாக காத்தான்குடி நூரி புத்தக நிலையம்,சலாகா,சிடி ஓப்டிகல்ஸ், நஜீம்ஸ், த அகடமி ஆகிய வர்த்தக ஸ்தாபனங்கள் உதவி செய்தனர்.

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment