ஜெனீவா: ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைப்பேசி ரகசியங்களை அமெரிக்க ஒட்டுக் கேட்டது குறித்து சுவிஸ் ஜனாதிபதி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி அழைப்புகளை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக் கேட்ட சம்பவமானது உலகம் முழுவதும் சர்சையை கிளப்பியுள்ளது.
இதனால் அமெரிக்காவுக்கும், ஜேர்மனுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து சுவிஸ் ஜனாதிபதி உய்லி மவுரர் கூறுகையில், வெளிநாட்டு பிரஜைகள், உலக தலைவர்கள் போன்றவர்களின் ரகசியங்களை ஒட்டு கேட்டு வந்த அமெரிக்காவின் தந்திரமானது மெர்க்கலின் விடயத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
என்னதான் பெரிய நாடாக இருந்தாலும் தங்களை விட சிறிய நாடுகளை உளவு பார்ப்பது தவறு.
இது அமெரிக்காவை வலுப்படுத்தாது, மேலும் பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய நிலையில் முழுமையான தகவல் தெரிந்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். LS
Leave a comment