மட்டு வைத்தியசாலையில் சௌக்கிய மற்றும் விஞ்ஞான பீடங்களிற்கான கற்பித்தல் அலகுக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க யினால் நாட்டி வைப்பு

sp-8பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்திய கற்கைகளை மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் 299 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய மற்றும் விஞ்ஞான பீடங்களிற்கான முழு வசதிகள் கொண்ட கற்பித்தல் அலகுகளுக்கான கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் முருகானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க,கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கிட்ணன் கோவிந்தராஜா, கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்திற்கான பீடாதிபதி வைத்திய கலாநிதி டாக்டர் சுந்தரநேசன், விளையாட்டுத் துறை அமைச்சின் உயர் அதிகாரி சுனில் குணவர்தண, முன்னாள் மட்டு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். ஜெயினுதீன்,கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர்கள்,பீடாதிபதிகள், மருத்துவ பீட மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

வைத்திய பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தங்களது கற்றல் செயற்பாடுகளை வைத்தியசாலையில் மேற்கொள்ளும் வகையில் இந்த கட்டடம் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment