Category: Your Kattankudy
-
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இலங்கைக்கு மற்றுமொரு மைல்கல்!
கொழும்பு: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலை மையில் இடம்பெற்றது. களனி பாலத்திற்கு அருகில் இருந்து கண்டி வீதியின் நுழைவாயிலில் ஆரம்பமாகும் 25.8 கிலோ மீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை கட்டுநாயக்க விமான நிலைய த்தில் முடிவடைகிறது.
-
கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஆதரவாளர்கள் சிலர் இன்று மேயரின் வாசஸ்தல அலுவலகத்தில் மேயர் சிராசை சந்தித்து கல்முனை மாநகர மேயர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடினர்
பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் ஆதரவாளர்கள் சிலர் இன்று (27.10.2013) மேயரின் வாசஸ்தல அலுவலகத்தில் மேயர் சிராசை சந்தித்து கல்முனை மாநகர மேயர் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடினர்.
-
சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் – ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கையில் அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் இணைந்து ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனம் கடந்த (25) வெள்ளிக்கிழமை நாடலாவிய ரீதியில் பாரிய விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
-
மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் விசேட பயான் நிகழ்வு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயலில் விசேட பயான் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இஷாத் தொழுகையின் பின் இடம்பெற்றது.
-
நரேந்திரமோடி கூட்டத்தில் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி!
இந்தியா: இந்தியாவின் பிஹார் மாநிலத்தின் தலைநகரான பட்னாவில் நரேந்திரமோடி அவர்களின் கூட்டம் ஒன்றில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்ததில் குறைந்தபட்சம் 4 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள்.
-
சவூதியில் கார் ஓட்டும் 60 பெண்கள்: அதிர்ச்சியில் சவூதி!
– SHM ரியாத்: சவுதியில் தடையை மீறி ரகசியமாக 60 பெண்கள் கார்களை ஓட்டிச் சென்றுள்ளனர். சம்பந்தப்பட்ட பெண்களே இந்த வீடியோவை யூடியூப்பிலும் தடையை குறித்து பேசி வருபவர்களுக்கும் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.சவுதி அரேபிய சாலைகளில் பெண்கள் கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்களை இயக்க அந்நாட்டு மதவாதிகள் தடை விதித்துள்ளனர். கார்களை ஓட்டுவதால் பெண்களின் கருப்பை பாதிக்கப்படுவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
-
நான் மலாலா! ‘I am Malala’
கராச்சி: உலகம் முழுவதும் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது… தலிபான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி, உயிர் பிழைத்திருக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதி வெளியிட்டிருக்கும் ‘ஐ ஆம் மலாலா ’(I AM MALALA) எனும் சுயசரிதை. நள்ளிரவில் உருவாக்கப்பட்ட ஒரு தேசத்தில் இருந்து வந்தவள் நான். ஒரு நண்பகலுக்குப் பின், ஏறத்தாழ மரணம் அடைந்தேன். எல்லாவற்றையும் புரட்டிப் போட்ட அந்த நாள், செவ்வாய்க்கிழமை, 9 அக்டோபர் 2012.
-
கல்முனையில் கயிறிழுப்பு
கல்முனை: கல்முனை மேயர் பதவி விவகாரம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை சூடுபிடித்துள்ள நிலையில் மேயர் சிராஸ் மீராசாஹிப் பதவி விலகுவாரா? இல்லையா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக எழுந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கல்முனை மாநகர சபைக்கென இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 11 ஆசனங்களைக் கைப்பற்றி ஆட்சியை தன் வசமாக்கியது.
-
‘விக்னேஸ்வரன் காமன்வெல்த் மாநாட்டை பகிஸ்கரிக்க வேண்டும்’
யாழ்ப்பாணம்: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. வடமாகாண சபையின் முதலாவது அமர்வு யாழ்ப்பாணம் கைதடியில் நடைபெற்றதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சித் தலைவர்களின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளியன்று மாலை நடைபெற்றது.
-
கடுகஸ்தோட்ட – உக்குரஸ்ஸபிட்டிய பள்ளிவாசல் உடைப்பு!
கட்டுகஸ்தோட்ட: கட்டுகஸ்தோட்ட உகுரஸ்ஸபிட்டிய பள்ளிவாசலை இன்று 26-10-2013 அதிகாலை இனம் தெரியாத நபர்கள் உடைத்துள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் பள்ளி வாசலின் கதவு உடைக்கப்பட்டு பிரதான அரையின் கதவும் உடைக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
-
காங்கேயனோடை அல்-அக்ஸாவில் மாணவர் ஆக்கத்திறன் கண்காட்சி
முகம்மட் சஜி காங்கேயனோடை: மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கல்விக்கோட்டத்திற்குற்பட்ட காங்கேயனோடை அல்-அக்ஸா மகாவித்தியாலத்தின் முன்பள்ளி மாணவர்கள் ஏற்பாடு செய்த மாணவர் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை அரம்பித்து வைக்கப்பட்டது.
-
மாவட்ட கலை இலக்கியவிழாவை முன்னிட்டு கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட கலை இலக்கியவிழாவை முன்னிட்டு கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.